காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: பெரியார் பிறந்த நாளில் தொடங்க முதல்வர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 15 يونيو 2026

காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: பெரியார் பிறந்த நாளில் தொடங்க முதல்வர் உத்தரவு



காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: பெரியார் பிறந்த நாளில் தொடங்க முதல்வர் உத்தரவு Chief Minister orders expansion of breakfast scheme up to Class 8; launch set for Periyar's birth anniversary.

​முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் 8-ம் வகுப்பு வரை விரி​வாக்​கம் செய்​யப்​படு​வ​தாக முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார். பெரி​யாரின் பிறந்த நாளான செப்​.17-ம் தேதி இத்​திட்​டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்​கு​மாறு சமூக நலத் துறை அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

கடந்த திமுக ஆட்​சி​யில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்​கப் பள்​ளி​களில் முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் கொண்டு வரப்​பட்​டது. கடந்த 2022 செப்​.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் இத்​திட்​டத்தை அப்​போதைய முதல்​வர் ஸ்டா​லின் தொடங்​கி​வைத்​தார். பின்​னர், அரசு உதவி​பெறும் தொடக்​கப் பள்​ளி​களுக்​கும் இத்​திட்​டம் விரிவுபடுத்​தப்​பட்​டது. விரி​வாக்க திட்​டத்தை ஸ்டா​லின் 2023 ஆக.25-ம் தேதி தொடங்​கி​வைத்​தார். தற்​போது 17.55 லட்​சம் மாணவ, மாணவி​கள் இத் திட்​டத்​தால் பயன்​பெற்று வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக அரசு பொறுப்​பேற்​றுள்ள நிலை​யில், முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை விரி​வாக்​கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில், முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவி​களுக்கு விரி​வாக்​கம் செய்ய ஏது​வாக, பெரி​யார் பிறந்த நாளான செப்​.17-ம் தேதி தொடங்​கு​வதற்கு நடவடிக்கை மேற்​கொள்​ளு​மாறு சமூக நலத் துறை அதி​காரி​களுக்கு முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தி​னார். மேலும் ‘‘சமூக நலம், மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்​படுத்​தப்​படும் திட்​டங்​களை, பயனாளர்​களான குழந்​தைகள், பெண்​கள், திருநங்​கைகள், மூத்த குடிமக்​களிடம் தடை​யின்​றி, துரித​மாக கொண்டு சேர்க்க வேண்​டும். குழந்​தைகள் பாது​காப்​பில் கவனம் செலுத்த வேண்​டும். போதைப் பொருள் பழக்​கத்​துக்கு ஆளா​காத​படி அவர்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும். அந்த பழக்​கத்​துக்கு ஆளான குழந்​தைகளை மீட்டு மறு​வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்​றும் அறி​வுறுத்​தி​னார். இந்த கூட்​டத்​தில் சமூக நலம், மகளிர் உரிமைத் துறை அமைச்​சர் ஜெகதீஸ்​வரி, தலை​மைச் செயலர் சாய்​கு​மார் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

முதல்​வரின் காலை உணவுத் திட்ட விரி​வாக்​கம் குறித்​து, கூட்​டத்​தில் பங்​கேற்ற உயர் அதி​காரி​களிடம் கேட்​ட​போது, ‘‘முதலில் அரசு நடுநிலைப் பள்​ளி​களில் மட்​டும் இத்​திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வதா அல்​லது அரசு மற்​றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்​ளி​களி​லும் சேர்த்தே அமல்​படுத்​து​வதா என்​பது பின்​னர் அறிவிக்​கப்​படும். அப்​போது​தான் எத்​தனை மாணவ, மாணவி​கள்​ பயன்​பெறு​வார்​கள்​ என்​ற விவரம்​ தெரிய​வரும்​’’ என்​று தெரி​வித்​தனர்​.


தமிழக பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் Breakfast scheme in Tamil Nadu schools expanded up to Class 8. காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

தமிழக பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி முதல் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்

முதல்வர் விஜய் அறிவிப்பு

5ஆம் வகுப்பு வரையிலான மாணவருக்கு காலை உணவு திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இன்று (ஜூன் 15, 2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த விரிவாக்கம் குறித்த முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

🗓️ தொடக்க நாள்செப்டம்பர் 17, 2026: தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளன்று இத்திட்டத்தின் முதற்கட்ட விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

🏫 பயன் பெறும் மாணவர்கள்

தற்போதைய நிலை: இதுவரை இத்திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

புதிய விரிவாக்கம்: இனி வரும் செப்டம்பர் மாதம் முதல் 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு பயிலும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர்.

🎯 திட்டத்தின் நோக்கம்

அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குதல்.

பள்ளிக்கு மாணவர்கள் வருகை தருவதை (Attendance) அதிகரித்தல்.

ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பசியைப் போக்கி, கல்வியில் அவர்களின் கவனத்தை மேம்படுத்துதல்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.