TET தேர்ச்சி ஆசிரியர்களுக்கு கட்டாயம் - Supreme Court New Judgment Copy (29.05.2026) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 2 يونيو 2026

TET தேர்ச்சி ஆசிரியர்களுக்கு கட்டாயம் - Supreme Court New Judgment Copy (29.05.2026)



TET தேர்ச்சி ஆசிரியர்களுக்கு கட்டாயம் - Supreme Court New Judgment Copy (29.05.2026)

தமிழக அரசு செய்தது என்ன?

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு– முந்தைய திமுக அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.

சீராய்வு மனுவில், “ஆசிரியர் தேர்வு என்பது மாநில அரசுகளின் கொள்கை முடிவுடன் தொடர்புடையது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பல ஆண்டுகளாக பணிபுரிந்த ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர்

உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவு என்ன?

தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா விசாரித்தனர்.

தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை முற்று முழுதாக டிஸ்மிஸ் செய்யவில்லை.

உச்சநீதிமன்றத்தின் கடந்த ஆண்டு தீர்ப்பில் சில திருத்தங்கள் மட்டும் செய்யப்பட்டன.

1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் (அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்) பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் TET தேர்ச்சி பெறுவது கட்டாயம். கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பில் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்குள் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது; இதனை 3 ஆண்டுகளுக்குள் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என திருத்தம் செய்தனர் நீதிபதிகள்.

2028-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் ‘TET’ தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்; கால நீட்டிப்பு தர முடியாது 3 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், கட்டாய ஓய்வு பெற்றவர்களாகக் கருதப்பட்டு, அவர்களுக்குரிய ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும்.

Click Here to Download - TET Compulsory For Working Teachers - Supreme Court New Judgment Copy (29.05.2026)

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.