பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? - அமைச்சர் ராஜ்மோகன் Is the Reopening of Schools Being Postponed? – Minister Rajmohan
ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என சொல்லி இருந்தோம்; அதனை மறுஆய்வு செய்யுமாறு கோரிக்கைகள் வந்துள்ளன; ஒரு வாரத்திற்கு வெப்ப அலை, மழை இருக்குமா என வானிலை மையத்திடம் கேட்டுள்ளோம்; அங்கிருந்து தகவல் வந்ததும் முதலமைச்சருடன் கலந்து பேசி ஆலோசிக்கப்படும்
-பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்.
பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இது குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையல், “தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாகப் பள்ளிகள் திறப்பைச் சற்றுத் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உட்படப் பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.
ஜூன் முதல் வாரத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும், வெப்ப அலை (Heat Wave) வீசுமா அல்லது பருவமழை தொடங்குமா என்பது குறித்த விரிவான தகவல்களை வழங்குமாறு வானிலை ஆய்வு மையத்திடம் கேட்டுள்ளோம். அந்த அறிக்கை கிடைத்தவுடன், அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் விஜய்யுடன் ஆலோசிக்கப்படும். அதன் பின்னரே பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படும்” என்றார்.
தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காலை உணவுத் திட்டம் குறித்த கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், “முந்தைய தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட ‘காலை உணவுத் திட்டம்’ மாணவர்களின் நலன் கருதி தற்போதைய த.வெ.க ஆட்சியிலும் தொய்வின்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்று அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்தார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.