ஆசிரியர்கள் TET தேர்ச்சி பெறாமல் பதவி உயர்வு பெற முடியுமா? - ஐகோர்ட் மதுரை கிளை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 14 مايو 2026

ஆசிரியர்கள் TET தேர்ச்சி பெறாமல் பதவி உயர்வு பெற முடியுமா? - ஐகோர்ட் மதுரை கிளை



ஆசிரியர்கள் TET தேர்ச்சி பெறாமல் பதவி உயர்வு பெற முடியுமா? - ஐகோர்ட் மதுரை கிளை Can Teachers Receive Promotions Without Passing the TET? — High Court, Madurai Bench

இந்திய அரசின் கட்டாய கல்வித் தகுதி சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதில் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டெட் தேர்வில் தேர்ச்சி பெற வற்புறுத்தாமல், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கோரிய மனுவில் இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எம். மரியா ஆண்டனி டெஸ்டோனிஸ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில்," சிவகங்கை ஆர்.சி. மறைமாவட்டத்திற்கு உட்பட்ட ஆர்.சி. தொடக்க பள்ளிகளில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு , TET தேர்வில் தேர்ச்சி பெற வற்புறுத்தாமல், தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினார். மனு விசாரித்த நீதிமன்றம், இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் , ஆர்.சி. பள்ளிகளின் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்திய அரசின் கட்டாய கல்வித் தகுதி சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதில் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன்னதாக, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில், " 2011-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் அடுத்த 2 ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் ஓய்வு பெற இன்னும் 5 ஆண்டுகளுக்கும் குறைவாக உள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்றும் அவர்களுக்கும் பதவி உயர்வு (Promotion) வழங்கப்படாது என்றும் தெரிவித்தது. இருப்பினும், இந்த உத்தரவு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்ததாது. சிறுபான்மைப் பள்ளிகள் தொடர்பான இறுதி முடிவு உச்சநீதிமன்றத்தின் பெரிய அமர்வு விசாரிக்கவுள்ளது.

இருப்பினும், கடந்த 2017ம் ஆண்டு சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களும் TET தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், 2025ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற வழங்கிய தீர்ப்பில் சிறுபான்மை நிறுவனங்கள் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.

இந்தச் சூழலில், தற்போது தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.