200 யூனிட்கள் இலவசம் - முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 9 مايو 2026

200 யூனிட்கள் இலவசம் - முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்



BREAKING : முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்

BREAKING🔥 | 500 யூனிட்களுக்கு உள்ளே மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட்கள் இலவசம் - முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்

முதல் கையெழுத்து.......

CMஆக பதிவேற்ற விஜய் முதல் கையெழுத்தாக 200 யூனிட் விலையில்லா மின்சாரம் திட்டத்தில் கையெழுத்திட்டார்

மக்கள் முன்னிலையில் முக்கிய கோப்புகளில் முதல்வர் விஜய் கையொப்பம்! தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் மக்கள் முன்னிலையில் கையொப்பமிட்டார்.

ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்ற கோப்பில் முதல் கையொப்பமிட்டார் விஜய். அதனைத்தொடர்ந்து, மக்களிடையே உரையாற்றினார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார் "இன்றைக்கு தமிழ்நாடு அரசு இருக்கும் நிலைமையை நான் உங்களிடம் சொல்ல வேண்டும்.

முன்னர் இருந்தவர்கள் 10 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்து விட்டுசென்றுள்ளார்கள்.

தமிழ்நாட்டின் கஜானாவை சுத்தமாக வழித்து வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

தூக்க முடியாத சுமையை ஏத்தி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

அப்படி ஒரு நிலைமையில்தான் இந்த பொறுப்பை நாம் கையில் எடுத்துள்ளோம். அதனால் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு உங்களுக்கு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடுவோம்." - விஜய்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.