ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை எப்போது தொடங்குகிறது? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 8 أبريل 2026

ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை எப்போது தொடங்குகிறது?



Teachers in Tamil Nadu are experiencing confusion due to a lack of official guidelines regarding working days amidst upcoming assembly election duties.

Schools must complete exams by April 16 and announce summer holidays.

Over 80% of teachers are assigned to election duty, requiring them to report on April 22 for the April 23 polling.

It is unclear if exam result publication and admissions must be completed before April 22 or if working days will extend after the election.

ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை எப்போது தொடங்குகிறது? When do the summer holidays begin for teachers?

தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறுவதால் ஆசிரியர்களுக்கு எப்போதும் கோடை விடுமுறை என்று ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை பள்ளிக் கல்வித் துறை தெளிவுபடுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை, வரும், 16க்குள் தேர்வு நடத்தி முடித்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு ஏப்., 24 வரை பள்ளி வேலைநாட்கள் என்றும், தேர்வு முடிவு வெளியிடுதல், மாணவர் சேர்க்கை முன்னேற்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும், 23ல் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. அப்பணியில், 80 சதவீதத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் வரும், 22 முதல், தேர்தல் பணிக்கு செல்ல வேண்டி இருக்கும்.

இதனால் தேர்வு முடிவு வெளியிடுவது உள்ளிட்ட பணிகளை முன்கூட்டியே முடிப்பதா அல்லது தேர்தலுக்கு பின்பும், பள்ளி வேலைநாட்களாக செயல்படுமா என, பள்ளி கல்வித்துறை சார்பில் இதுவரை வழிமுறை எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர் குழப்பம் அடைந்துள்ளதால், உரிய தீர்வு காண வலியுறுத்தி உள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.