பெற்றோர்களின் கவனத்திற்கு! பள்ளி கோடை விடுமுறை மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 16 أبريل 2026

பெற்றோர்களின் கவனத்திற்கு! பள்ளி கோடை விடுமுறை மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்



*📢 பெற்றோர்களின் கவனத்திற்கு! பள்ளி கோடை விடுமுறை மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் ☀️🏝️*

பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, மாணவர்களின் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கோடை விடுமுறைக்காகச் சில முக்கிய அறிவுறுத்தல்கள்:

🗓️ விடுமுறை தொடக்கம்: 17.04.2026 முதல்.

✅ பாதுகாப்பு நடவடிக்கைகள்:

☀️ காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவர்கள் வெளியே விளையாடுவதைத் தவிர்க்கவும்.

💧 போதுமான அளவு குடிநீர் அருந்துவதை உறுதி செய்யுங்கள். வெளியே செல்லும்போது தொப்பி அணிய அறிவுறுத்துங்கள்.

🌊 கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டைகளில் மாணவர்கள் குளிக்கச் செல்வதைத் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

🧠மனநலம் மற்றும் உடல்நலம்:

தனிமையைத் தவிர்க்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட ஊக்குவியுங்கள்.

🎶 டிவி மற்றும் செல்போன் பயன்படுத்துவதைக் குறைத்து, இசை மற்றும் சமூகத் தொடர்புகளில் ஆர்வம் காட்டச் சொல்லுங்கள்.

🍎 பாரம்பரிய உணவுகள் மற்றும் கோடை காலத்திற்கு ஏற்ற பழவகைகளை மாணவர்களுக்கு வழங்கவும்.

மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்து, இந்த விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்கச் செய்வோம்!


மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு! Director of School Education Issues Order for Students to Spend Summer Vacation Productively!

பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-6

ந.க.எண். 0011 /DSE/PC/2026 நாள். 15-04-2026

பொருள்: பள்ளிக் கல்வி -17.04.2026 முதல் கோடை விடுமுறை- மாணவர்கள் பாதுகாப்பாக இருத்தல் மற்றும் பயனுள்ள வகையில் விடுமுறையை கழித்தல் பெற்றோர்களுக்கு வேண்டுகோள்-

சார்பாக

அனைத்து மாணவர்களுக்கும் 17-04-2026 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள் தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களின் பாதுகாப்பு

கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளிப்புற விளையாட்டுகளின் போது அதிக அளவு தண்ணீரை அருந்த செய்யுங்கள். சூரிய ஒளி தாக்காமல் இருக்க மாணவர்கள் தொப்பிகளைப் பயன்படுத்த அறிவுறுத்துங்கள். உச்ச சூரிய வெப்ப நேரத்தைத்தில் வெளியே செல்வதையும் வெயிலில் விளையாடுவதையும் தவிர்க்கவும் (காலை 10-மாலை 4) அறிவுறுத்துங்கள். ஆபத்தான பொருட்களைப் மாணவர்களின் பார்வையில் படாதவாறு பாதுகாப்பாக வைக்கவும். மாணவர்கள் நீர் நிலைகளில் நீச்சல் தெரியாமல் சென்று குளிக்க முற்படும் போது நீரில் மூழ்க வாய்ப்பு உள்ளது. எனவே விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டைபோன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம். மாணவர்களின் மனநலம் காத்தல்

பள்ளி கோடை விடுமுறைநாட்களில் சில மாணவர்கள் தங்கள் உடல் மற்றும் மன நலனைப் பாதிக்கும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். தனிமை உணர்வுகளைத் தடுக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளை கவனித்தல் போன்றவற்றின் மூலம் சமூக தொடர்புகளை ஊக்குவிக்கவும் மனநலனை பேணவும் முடியும். தொலைகாட்சி மற்றும் கைபேசி ஆகியவற்றை பார்பதில் அதிகமான நேரத்தை செலவிடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

ரோக்கியமான உணவு

மாணவர்களின் வளர்ச்சிக்கு சமர்ச்சீரான உணவு அளிப்பது அவசியம். அதனை உறுதி படுத்தும் விதமாக பராம்பரிய உணவு வகைகளை தயார் செய்து அளியுங்கள். கோடை காலத்தை எதிர்கொள்ள ஏதுவாக கோடை காலத்திற்கு ஏற்ற பழவகைகளை மாணவர்களுக்கு வழங்குங்கள்.

கல்வி இணை செயல்பாடுகள்

பெற்றோர்கள் மாணவர்களை அருகாமையில் உள்ள பொது நூலகங்களுக்கு அழைத்து சென்று ஒரு மணி நேரமாவது புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்கவும். அவர்களின் ஆர்வங்களைப் பொறுத்து காமிக்ஸ் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், சீறார் கதைகள், நீதி நூல்கள் மற்றும் பெருந்தலைவர்கள் பற்றிய நூல்களை படிக்க அறிவுறுத்துங்கள். இசை, நடனம் மற்றும் ஓவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும்.

ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு

மாணவர்கள் காலை மற்றும் இரவு இரண்டு வேளை பல் துலக்குதல், காலை மற்றும் மாலை இரண்டு வேளை குளித்தல் போன்ற பழக்கங்களை ஊக்குவியுங்கள். பெற்றோர்களுக்கு உதவியாக சிறு சிறு வேலைகளை செய்ய பழக்கப்படுத்துங்கள். வீட்டுத் தோட்டத்தினை பராமரிக்கவும் புதிய பூச்செடிகளை நடவு செய்து வளர்க்க ஊக்கப்படுத்துங்கள்

குடும்பம் மற்றும் சமூக நேரம்

தாத்தா பாட்டி உள்ள வீடுகளில் சேர்ந்து உணவு அருந்துங்கள். மேலும் பெரியோர்களை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்குங்கள். பள்ளி தலைமையாசிரிகளுக்கு மேற்கண்ட அறிவுரைகளை மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெறுநர்:

பள்ளிக் கல்வி இயக்குநர்

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை)

நகல்: அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை சென்னை-9

அவர்களுக்கு பணிந்து அனுப்பப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD மாணவர்கள் கோடை விடுமுறையை பாதுகாப்பாக பயனுள்ள வகையில் கழித்தல் சார்பாக - DSE Proceedings PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.