முதுநிலை ‘க்யூட்' தேர்வு முடிவுகள் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 26 أبريل 2026

முதுநிலை ‘க்யூட்' தேர்வு முடிவுகள் வெளியீடு



முதுநிலை ‘க்யூட்' தேர்வு முடிவுகள் வெளியீடு

The text announces the release of the Postgraduate CUET entrance exam results for central educational institutions in Tamil.

Results Released: The National Testing Agency (NTA) has published the postgraduate entrance exam results on their official website.

Exam Details: The exam was held last month across 157 subject areas for admission to postgraduate arts and science courses.

Participation: A total of 411,366 students applied, but only 345,220 actually appeared for the exam.



‘கியூட்’ தேர்வு முடிவுகள் வெளியீடு

முதுகலை பட்​டப்​படிப்​புக்​கான ‘கியூட்' நுழைவுத்​தேர்வு முடிவு​கள் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்ள​தாக தேசிய தேர்வு முகமை அறி​வித்​துள்​ளது.

மத்​திய அரசு பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் நிகர்​நிலை பல்​கலைக்​கழகங்​களில் முதுகலை பட்​டப்​படிப்பு மாணவர் சேர்க்​கைக்கு 'கியூட்' நுழைவுத்​தேர்வு (பிஜி) நடத்​தப்​படு​கிறது. இத்​தேர்வை மத்​திய கல்வி அமைச்​சகத்தின் தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்தி வரு​கிறது.

அந்த வகை​யில் 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான கியூட் (பிஜி) நுழைவுத்​தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்​தப்​பட்​டது. மொத்​தம் 157 பாடப்​பிரிவு​களுக்கு கணினி வழி​யில் நடத்​தப்​பட்ட தேர்வை நாடு முழு​வதும் 3 லட்​சத்து 45 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ-​மாணவி​கள் எழு​தினர்.

இந்​நிலை​யில் கியூட் நுழைவுத்​தேர்வு முடிவு​களை என்​டிஏ இணை​யதளத்​தில் (www.exams.nta.nic.in/ceut-pg) வெளி​யிடப்​பட்டு உள்​ளது. தேர்​வர்​கள் இணை​யதளத்​தில் தங்​கள் விண்​ணப்ப எண் மற்​றும் பிறந்த தேதியை குறிப்​பிட்டு மதிப்​பெண் சான்​றிதழை பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம் என என்​டிஏ அறி​வித்​துள்​ளது மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு CUET PG 2026 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் முக்கியத் தகவல்கள்

வெளியிடப்பட்ட தேதி: ஏப்ரல் 24, 2026 (மாலை 5 மணி அளவில்).

அதிகாரப்பூர்வ இணையதளம்: exams.nta.nic.in/CUET-PG. தேவைப்படும் விவரங்கள்: உங்கள் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகியவற்றை உள்ளிட்டு மதிப்பெண் அட்டையைப் (Scorecard) பதிவிறக்கம் செய்யலாம்.

CUET UG 2026 நிலவரம்

யுஜி (இளங்கலை) படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை:

தேர்வு தேதிகள்: மே 11 முதல் மே 31, 2026 வரை நடைபெற உள்ளன.

முடிவுகள் வெளியீடு: ஜூலை முதல் வாரத்தில் (ஜூலை 2026) முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையதளம்: cuet.nta.nic.in அல்லது cuet.samarth.ac.in.

📥 மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

NTA CUET PG இணையதளத்திற்குச் செல்லவும்.

முகப்புப் பக்கத்தில் உள்ள "CUET PG 2026 Scorecard" லிங்கைக் கிளிக் செய்யவும்.

உங்கள் லாகின் விவரங்களை உள்ளிட்டு 'Submit' கொடுக்கவும்.

உங்கள் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை திரையில் தோன்றும், அதைச் சேமித்துக்கொள்ளவும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.