பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு!! பணிச் சான்று வழங்குவது இழுத்தடிப்பு!!(பத்திரிகை செய்தி)
This news report from Madurai discusses delays in issuing service certificates to teachers required for applying for the Special TET examination in Tamil Nadu.
Over 150,000 working teachers are expected to apply for the exam scheduled for June 4th and 5th.
The deadline to apply is April 10th, and a service certificate is mandatory for submission.
Education officials are reportedly delaying the issuance of these certificates due to focus on public exam duties
சிறப்பு 'டெட்' தேர்வு
விண்ணப்பிக்க பணிச்சான்று வழங்குவது இழுத்தடிப்பு
மதுரை, மார்ச் 21-
தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்கள் சிறப்பு டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்க வேண் டிய பணிச்சான்றுகளை பொதுத் தேர்வை காரணம் காட்டி அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். தமிழகத்தில் பணியில் உள்ள ஒன்றரை லட்சத் திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஜூன் 4, 5 ல் சிறப்பு டெட் தேர்வு நடக்கிறது. இதற்கு விண் ணப்பிக்க கடைசி நாள் ஏப்.,10. இதற்கு விண் ணப்பிக்க பணிச்சான்று பெற வேண்டும். இச் சான்றை அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு சி.இ.ஒ.,க்களும், உதவிபெறும் பட்டதாரி ஆசிரியர் களுக்கு 4.இ.ஓ.,க்களும், இடைநிலை ஆசிரியர்க ளுக்கு வட்டார கல்வி அலுவலர்களும் (பி.இ.ஓ.,). மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளி டி.இ.ஓ.,வும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஒன்றரை லட்சம் ஆசிரியர் விண்ணப்பிக்க வேண்டும். இது வரை 20 சதவீதம் பேரே விண்ணப்பித்துள்ளனர். பொதுத் தேர்வு பணிகளில் சி.இ.ஒ..
டி.இ.ஓ.,க்கள் கவனம் செலுத்துவதால் இச்சான்று கிடைப் பதில்லை. விண்ணப்பிக்க கடைசி ஏப்., 10க்குள் அனைவருக்கும் இச்சான்று கிடைக் குமா என்பது சந்தேகம் தான். இப்பிரச்னையில் கல்வி அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் சங்க மாநில தலைவர் ஜெயக்கண்ணன் கூறுகையில், 'மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு எமிஸ் எண் உள் ளதால் சிறப்பு டெட்' தேர்வில் பங்கேற்கலாம். சில மாவட்டங்களில் டி.இ.ஓ.,க்கள் பணிச்சான்று வழங் குகின்றனர். பல மாவட்டங்களில் மறுக்கின்றனர். அதிகார்கள் நடவடிக்கை வேண்டும் என்றார்

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.