அரைப் பவுன் நகை, பணம் தருமாறு லஞ்சம் கேட்கும் வட்டார கல்வி அலுவலர் !! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 4 مارس 2026

அரைப் பவுன் நகை, பணம் தருமாறு லஞ்சம் கேட்கும் வட்டார கல்வி அலுவலர் !!



அரைப் பவுன் நகை, பணம் தருமாறு லஞ்சம் கேட்கும் வட்டார கல்வி அலுவலர் District Education Officer asks for bribe of half a pound of jewelry and money!!

பள்ளிகளில் ஆண்டாய்வு செய்ய அரைப் பவுன் நகை, பணம் தருமாறு வட்டார கல்வி அலுவலர் கேட்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

🎤இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், செயலாளர் சேகர், பொருளாளர் உமா மற்றும் சங்க நிர்வாகிகள் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

🗞️அதில் கூறியிருப்பதாவது:

🍭வேலூர் மாவட்டத்தில்

காட்பாடி

குடியாத்தம்

கே.வி.குப்பம்

அணைக்கட்டு

கணியம்பாடி

பேரணாம்பட்டு

வேலூர் புறநகர் மற்றும்

வேலூர் மாநகரம் என 8 வட்டார கல்வி அலுவலங்கள் செயல்பட்டு வருகின்றன. 🔥இதில் குடியாத்தம் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருபவர், ஆசிரியர்களிடம் லஞ்சம் வாங்கி வருகிறார்.

❌அரசு பள்ளிகளில் ஆண்டு ஆய்வு செய்ய ₹10 ஆயிரம்

பள்ளியைப் பார்வையிட ₹2 ஆயிரம்,

அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆண்டாய்வுக்கு ஆசிரியர்களிடம் தலா ₹5 ஆயிரம்

தேர்வு நிலை, சிறப்பு நிலை உத்தரவுகளை வழங்க அரைப் பவுன் மோதிரம் அல்லது

₹20 ஆயிரம் வழங்கவேண்டும் என கேட்டு நிர்பந்திக்கிறார்.

🔥மேலும் பெண் ஆசிரியர்களிடம் பணம் வசூலிப்பதற்காக முறையற்ற வகையில் நடந்துகொள்வதும், மிரட்டுவது மற்றும் ஒருமையில் பேசுவதுமாக உள்ளார்.

⏩கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி குடியாத்தம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் நடந்த தலைமை ஆசிரியர் கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலரை கண்டித்து தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். எனவே அவரிடம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.