பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: மாணவர்கள் மகிழ்ச்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 25 مارس 2026

பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று முடிவடைந்​தது. இதனால், மாணவர்​கள் மிக​வும் மகிழ்ச்​சி​யுடன் காணப்​பட்​டனர். விடைத்​தாள் திருத்​தும் பணி ஏப்​.8-ம் தேதி தொடங்க உள்​ளது.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி நேற்​றுடன் முடிவடைந்​தது. நிறைவு நாளில் கணினி அறி​வியல், உயிரி வேதி​யியல், தொடர்பு ஆங்​கிலம், இந்​திய கலாச்​சா​ரம், அரசி​யல் அறி​வியல் உள்​ளிட்ட பாடங்​களுக்​கான தேர்​வு​கள் நடை​பெற்​றன. தமிழகம் முழு​வதும் 3.89 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் தேர்​வு​களை எழு​தினர். இதில் கணினி அறி​வியல் தேர்வு கடின​மாக இருந்​த​தாக மாணவர்​கள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து மாணவர்​கள், ஆசிரியர்​களிடம் கேட்​ட​போது, “இது​வரை இல்​லாத அளவுக்கு கணினி அறி​வியல் வினாத்​தாளில் மறை​முக வினாக்​கள் அதி​கம் இருந்​தன. குறிப்​பாக, 5 மதிப்​பெண் பகு​தி​யில் 2 கேள்வி​களும், 3 மதிப்​பெண் பகு​தி​யில் 3 கேள்வி​களும் கடின​மாக இருந்​தன. ஒரு மதிப்​பெண் கேள்வி​கள் எளி​தாக இருந்​த​தால் தேர்ச்சி பெறு​வ​தில் சிக்​கல் இருக்​காது. ஆனால், நன்​றாக படிக்​கும் மாணவர்​கள்​கூட அதிக மதிப்​பெண் பெறு​வ​தில் பாதிப்பை ஏற்​படுத்​தும்” என்​றனர்.

பொதுத் தேர்வு முடிவடைந்​த​தால், மாணவ, மாணவி​கள் மிக​வும் மகிழ்ச்​சி​யுடன் காணப்​பட்​டனர். சில பள்​ளி​களில் பிரிவு உபச்​சார விழாக்​களும் நடத்​தப்​பட்​டன. மாணவர்​கள் பள்ளி வளாகத்​தை​விட்டு வெளி​யேறும்​போது அசம்​பா​விதங்​கள் ஏதும் நிகழாமல் தடுக்க காவல் அதி​காரி​களை பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்த வேண்​டும் என தலைமை ஆசிரியர்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வுறுத்தி இருந்​தது. அதன்​படி, சென்னை உட்பட பல்​வேறு பகு​தி​களி​லும் தேர்வு மையங்​களில் போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டிருந்​தது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழு​திய சுமார் 8 லட்​சம் மாணவர்​களின் விடைத்​தாள் திருத்​தும் பணி ஏப்​ரல் 8 முதல் 20-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதற்​காக தமிழகம் முழு​வதும் 80-க்​கும் மேற்​பட்ட முகாம்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. திருத்​துதல் பணி​களில் சுமார் 46 ஆயிரம் முது​நிலை ஆசிரியர்​கள் ஈடுபட உள்​ளனர். தொடர்ந்​து, மதிப்​பெண் பதிவேற்​றம் உள்​ளிட்ட பணி​களை முடித்​து, திட்​ட​மிட்​டபடி தேர்வு முடிவு​கள் மே 8-ம் தேதி வெளி​யிடப்​படும் என்று துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​. பிளஸ் 2 தேர்வு இன்று நிறைவு

சென்னை, மார்ச் 25: பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமையு டன் (மார்ச் 26) நிறைவு பெறவுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

மொழிப் பாடங்களுக்குப் பிறகு இயற்பியல்,வேதியி யல், கணிதம் ஆகிய பாடங்கள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதனால் மேற்கண்ட பாடங்க ளில் சென்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறை யும். மேலும் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் கணிசமாக குறையும் என ஆசி ரியர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக் கான பொதுத் தேர்வு கடந்த திங்கள்கிழமை நிறைவடைந்தது.

அதேவேளை பிற பாடப்பிரிவு மாணவர்களுக்கான கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிரி வேதியியல், தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட தேர்வுகள் வியாழக்கிழமை நடைபெறவுள்ளன. இத்துடன் பிளஸ் 2 வகுப்பில் அனைத்து மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நிறைவு பெறவுள்ளது.


தொடர்ந்து பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 9-இல் தொடங்கி, ஏப்ரல் 20 வரை நடைபெற உள் ளது. 45,000-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, மே 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

This newspaper clipping discusses the conclusion of the Class 12 public examinations in Tamil Nadu, mentioning student feedback on the difficulty of science and math papers, the impact on cut-off marks for higher education, and the schedule for evaluation and results release.

Examination End: The Class 12 exams conclude on Thursday, March 26, following a start on March 2.

Difficulty Concerns: Students found physics, chemistry, and mathematics challenging, likely reducing the number of centums and lowering cut-offs for medical and engineering courses.

Evaluation Timeline: Answer paper evaluation is scheduled to take place from April 9 to April 20.

Results Release: Examination results are planned to be announced on May 8.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.