01.04.2026 - பங்குனி உத்திர திருவிழா - இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை (Local Holiday) அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 31 مارس 2026

01.04.2026 - பங்குனி உத்திர திருவிழா - இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை (Local Holiday) அறிவிப்பு

01.04.2026 - பங்குனி உத்திர திருவிழா - இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை (Local Holiday) அறிவிப்பு



ஏப்.1-ம் தேதி உள்ளூர் விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு Local Holiday on April 1st — Collector Announces

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு ஏப்.1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலங்கள் செயல்படாது. விடுமுறையை ஈடுசெய்ய ஒரு குறிப்பிட்ட நாளில் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு விரைவில் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது

ஏப்ரல் 1-ம் தேதி (புதன்கிழமை), திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பின்படி இந்த விடுமுறை குறித்த முக்கியத் தகவல்கள் இதோ: விடுமுறைக்கான காரணம்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் மற்றும் அம்மன் கோவில்களில் கொண்டாடப்படும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எவற்றுக்கு விடுமுறை? மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும்.

வங்கிப் பணிகள்: ஏப்ரல் 1-ம் தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதால், வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு இது ஏற்கனவே பொது விடுமுறையாகும்.

முக்கியக் குறிப்பு: இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மற்றொரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படலாம் (பொதுவாக உள்ளூர் விடுமுறை அறிவிப்புகளின் போது இது வழக்கம்).

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஏப்ரல் 1-ம் தேதி வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது; பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இது ஒரு வேலை நாளாகவே இருக்கும். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் பிறப்பிப்பவர் திரு.A.K. கமல் கிஷோர், இ.ஆ.ப.,

ந.க.COLR/ஆ1/2381/2026

நாள் : 19-03-2026

பொருள் உள்ளூர் விடுமுறை - தென்காசி மாவட்டம் 01.04.2026 அன்று பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுவது - தொடர்பாக

ஆணை:

தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 01.04.2026 (புதன்கிழமை) அன்று பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பார்வை 1-ல் கண்டுள்ள அரசாணையின்படி வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்குற்பட்டு 01.04.2026 அன்று, தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

மேற்குறிப்பிட்ட உள்ளூர் விடுமுறை நாளில் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி எவ்வித தொய்வின்றி வழக்கம் போல் நடைபெறும். மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

மேலும் உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act-1882)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம், சார்நிலைக்கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பான அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 11.04.2026 சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

This document is an official order from the District Collector of Tenkasi regarding a local holiday.

A local holiday is declared for all state government offices and educational institutions in Tenkasi district on April 1, 2026, for the Panguni Uthiram festival.

This holiday does not apply to public examinations or important exams scheduled on that day, nor to election work or bank operations.

April 11, 2026 (Saturday) will be a working day to compensate for this holiday

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.