தேர்வறையில் மாணவர்களிடம் துண்டு சீட்டு கண்டறியப்பட்டது - விளக்கம் கோரி CEO உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 16 مارس 2026

தேர்வறையில் மாணவர்களிடம் துண்டு சீட்டு கண்டறியப்பட்டது - விளக்கம் கோரி CEO உத்தரவு

தேர்வுப்பணி கவனக்குறைவு விளக்கம் கோருதல் தொடர்பாக - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Proceedings of the Chief Educational Officer — Regarding the Call for Explanation Concerning Negligence in Examination Duties

விழுப்புரம் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ந.க.எண். 1639/ஆ3/2026 நாள். .03.2026

பொருள்:

பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - விழுப்புரம் மாவட்டம்-விழுப்புரம் கல்வி மாவட்டம் திரு காமராஜ், நகராட்சி மேல்நிலைப்பள்ளி கணினி பயிற்றுநர் திரு.R. பிரகாஷ் தேர்வுப்பணி கவனக்குறைவு விளக்கம் கோருதல் தொடர்பாக,

பார்வை:

விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் குறிப்பு

2025-2026 ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலைக் கல்வி பொதுத்தேர்வு 09.03.2026 அன்று 12ம் வகுப்பு வேதியியல் தேர்வு நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தேர்வு மையத்தை பார்வையிட்டபோது தேர்வு மைய எண். 240025 இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பறக்கும்படையாக பணியாற்றிய திரு.R. பிரகாஷ் கணினி பயிற்றுநர், மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்லும்முன் பரிசோதனை செய்து பாடம் சம்மந்தமான துண்டு சீட்டுகளை அகற்றாததால், தேர்வறையில் மாணவர்களிடம் துண்டு சீட்டு கண்டறியப்பட்டது. எனவே, தங்களது பணியில் முழு ஈடுபாட்டோடு செயல்படாததும், தேர்வு பணியில் சுணக்கமாக செயல்பட்டதற்கான உரிய விளக்கத்தினை கோர அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் திரு.R. பிரகாஷ் என்பவர் கீழ்க்கண்ட குற்றச்சாட்டிற்கு உடனடியாக விளக்கம் அளிக்க தெரிவிக்கப்படுகிறது.


This document is an official explanation request sent to Mr. R. Prakash, a Computer Instructor at Thiru Kamaraj Municipal Higher Secondary School, regarding negligence during his invigilation duty at a public examination center in Villupuram district.

On March 9, 2026, during the 12th-grade Chemistry exam, the Chief Educational Officer observed that students possessed cheat sheets at center number 240025.

Mr. R. Prakash, who was working as a flying squad member, is accused of failing to inspect and remove these materials before the students entered the examination hall.

He is directed to submit an immediate explanation for this negligence in his duties.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.