புதிதாக நியமனம் பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 16.02.2026 முற்பகல் முதல் பணியேற்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
- The Director of School Education has ordered that all newly appointed postgraduate teachers will take up their duties from the morning of 16.02.2026!
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2023-24, 2024-25 ஆண்டுக்கான முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு EMIS இணைய தளம் வாயிலாக பணி நியமன கலந்தாய்வு 7.2.2026 மற்றும் 9.2.2026 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டுள்ளது.
பணி நாடுநர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா 13.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுவதால், அன்று கலந்துகொள்ளும் 20 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மாலை அல்லது சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் முதன்மைக்கல்வி அலுவலர்களால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பபட வேண்டும். அதன் பின்னர் தனி நபர் மருத்துவ தகுதிச் சான்று பெற்று அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் 16.02.2026 அன்று திங்கட்கிழமை முற்பகல் முதல் பணி நியமன ஆணை பெற்றுள்ள பள்ளிகளில் பணியேற்க அனுமதிக்கப்பட வேண்டும்.
இது குறித்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திடவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் முதன்மைக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
This document outlines the procedures for distributing appointment orders to newly selected postgraduate teachers and other educational staff in Tamil Nadu.
It details the scheduling for receiving these orders and the subsequent requirement to join their assigned schools.
Appointment orders will be issued by the Chief Educational Officers on February 13th or 14th, 2026, depending on the district.
Recipients must obtain an individual medical fitness certificate before joining.
Selected staff are instructed to report for duty on the forenoon of February 16th, 2026.
Thursday, February 12, 2026
New
புதிதாக நியமனம் பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 16.02.2026 முற்பகல் முதல் பணியேற்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
postgraduate teachers
Tags
Department of School Education,
Director of School Education,
DSE PROCEEDINGS,
Postgraduate,
Postgraduate Teacher Recruitment,
postgraduate teachers
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.