highlights a plea made in Parliament by Kallakurichi MP D. Malaiyarasan regarding teachers appointed before the implementation of the Teacher Eligibility Test (TET) in Tamil Nadu.
MP Malaiyarasan requested a permanent exemption from TET for teachers appointed prior to the Right to Education (RTE) Act implementation in the state.
He emphasized that these teachers, appointed legally under previous rules, face severe job insecurity, promotion freezes, and wage stagnation due to retroactive application of the TET rule.
The plea urges the Central Government and the Ministry of Education to protect the salaries, promotions, and retirement benefits of these experienced teachers and to establish a clear national policy to resolve this long-standing issue.
நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன் கோரிக்கை Permanent exemption should be given to appointed teachers - Kallakurichi MP Malayarasan demands in Parliament
நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன் கோரிக்கை
'டெட்' தேர்வு அமலுக்கு வருவதற்கு முன்பே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்
நாடாளுமன்றத்தில் கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன் கோரிக்கை
2009 ஆம் ஆண்டு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (ஆர் டி இ)சட்டம் அமல்படுத்தப்பட்டது தொடர்பான தீவிரமான மற்றும் நீண்ட கால பிரச்சனைகள் குறித்து,தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி இ டி) அறிமுகப்படுத்துவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள்குறித்துகள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் தே. மலையரசன் நாடாளுமன்றத்தில் பேசினார்.
அவர் பேசியதாவது:-
ஆர்டி இ சட்டம் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 23. 2011ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது அதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு டி இ டி ஒரு கட்டாய தகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் டெட் தேர்வு அமல்படுத்துவதற்கு முன்பே அப்போதைய விதிமுறைகளை பின்பற்றி பெரும் அளவிலான ஆசிரியர்கள் சட்டபூர்வமாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இருந்த போதிலும் பின்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அத்தகைய ஆசிரியர்களை பின்னோக்கிச் சென்று டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும் என்ற கட்டாயப்படுத்தினர். இது கடுமையான வேலை பாதுகாப்பு இன்மை. மத்திய அரசு மற்றும் கல்விஅமைச்சகத்தை நான் பின்வருமாறு கேட்டுக்கொள்கிறேன் அமலுக்கு வருவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். அத்தகைய ஆசிரியர்களின் பணி ஊதியம், பதவி உயர்வுகள் மற்றும் ஓய்வூதிய பலன்கள் பாதுகாக்க வேண்டும் பாகுபாடுகளையும் நீண்டகால வாய்ப்புகளை தவிர்ப்பதற்காக ஒரு தெளிவான மற்றும் சீரான தேசியக் கொள்கையை வெளியிட வேண்டும்.
இது தமது குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த ஆசிரியர்களுக்கு பதவு உயர்வுகள் மறுக்கப்படுதல்,ஊதிய பலன் முடக்கம் மற்றும் மன உளைச்சலுக்கு வை வகுந்தது.
பணியாற்றி வரும் பல ஆசிரியர்கள் இன்றும் தகுதியற்றவர்களாக கருதப்படுகிறார்கள். இது மிகவும் அநீதியானது. ஒருதசாப்தத்திற்கும் மேலாகநேர்மையாக அரசு உதவி பெறும் மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உட்பட 2012 க்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அப்போது இருந்தே விதிகள் மற்றும் நடைமுறையின் படியே நியமிக்கப்பட்டனர் என்பதனை சுட்டிக்காட்டுவது பொருத்தமானது.
புதிய தகுதிகளை பின்னோக்கிச் சென்று பயன்படுத்துவது என்பது இயற்கை நீதி மற்றும் நிர்வாக நேர்மையின் கொள்கைக்கு எதிரானது. மேலும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் சங்கங்கள் சார்பில் விலக்கு கோரி மீண்டும் மீண்டும் மனுக்கள் சமர்ப்பிக்கப் ப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை எந்த ஒரு விரிவான கொள்கையும் முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.