ஆசிரியர்களும் தகுதித் தேர்வுகளும்...தினமணி நடுப்பக்கக் கட்டுரை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 10 فبراير 2026

ஆசிரியர்களும் தகுதித் தேர்வுகளும்...தினமணி நடுப்பக்கக் கட்டுரை



ஆசிரியர்களும் தகுதித் தேர்வுகளும்...தினமணி நடுப்பக்கக் கட்டுரை

உலகம் நாகரிகம் பெற்ற காலத்திலிருந்தே கல்வியும், அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் மதிக்கப்பட்டனர். ஆசிரியப் பணி அறப்பணியாக மதிக்கப்பட்டது. புராண காலங்கள் என்றாலும், அறிவியல் காலங்கள் என்றாலும் சரி, ஆசிரியர் என்னும் குருமார்கள் அனைவராலும் வணங்கப்பட்டனர். குருமார்களின் திண்ணைப் பள்ளிகளிலேயே படிப்பிக்கப்பட்டனர். பாண்டவர்களும், கௌரவர்களும் ஒரே குருவிடம் பாடம் கேட்ட பெருமைக்குரியவர்கள்.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே என்று புறநானூறு (183) பாடுகிறது. கற்பிக்கும் ஆசிரியருக்கு துன்பம் வரும்போது உதவி செய்தும், அவருக்குத் தேவையறிந்து பொருள் கொடுத்தும், வெறுப்பின்றி பணிவுடன் கற்றல் வேண்டும்.

பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின்னரே கல்வியும், ஆசிரியப் பணியும் நடைமுறைப்படுத்தப்பட்டன. கல்வித் துறை தொடங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு அரசு ஊழியர்களாக ஆக்கப்பட்டனர். ஆசிரியர் பணிபெற வேண்டுமானால் பயிற்சி பெற வேண்டும் என்று அதற்கு அரசு விதிகளும் வகுக்கப்பட்டன. இப்போது, மத்திய அரசின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுக்கு இரண்டு தடவை 'டெட்' தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் அதுபோல் தேர்வை நடத்துவது கிடையாது. 2022-ஆம் ஆண்டு நடத்தவேண்டிய தேர்வு கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டது.

கடந்த 2025-ஆம் ஆண்டுக்கான 'டெட்' தேர்வு கடந்த நவம்பர் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெற்றது. 4.24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.

பணியில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் தங்கள் குறைபாடுகளைக் கோரிக்கைகளாகத் தெரிவித்து அமைதி வழியில் போராட உரிமைப் படைத்தவர்கள். ஆனால் அவர்களை அடக்க முயல்வது நியாயம் இல்லை.

ஒரு தேசத்தின் தலைவிதியானது வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்று கோத்தாரி கல்விக் குழு கூறுகிறது. மாணவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்கும் ஆசிரியர்களைப் போற்றாத சமுதாயம் எப்படி முன்னேறும்? இதை அரசும், கல்வித் துறையும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமணி

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.