வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : தலைமைச் செயலாளர் எச்சரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 3 فبراير 2026

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : தலைமைச் செயலாளர் எச்சரிக்கை



வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை

அங்கீகரிக்கப்படாத சில அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் , வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

போராட்டத்தில் பங்கேற்க விடுப்பு எடுத்தால் ஊதியம் வழங்கப்படாது எனவும், போராட்டத்தில் ஈடுபடும் பகுதிநேர ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கவும் ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அங்கீகரிக்கப்படாத சில அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பிப்ரவரி 3 (இன்று) மற்றும் பிப்ரவரி 10 ஆகிய தேதிகளில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், இந்தச் சுற்றறிக்கை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் துறைத் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்:

ஊதியம் கிடையாது: 'வேலையில்லை எனில் ஊதியம் இல்லை' (No Work, No Pay) என்ற விதிமுறை கண்டிப்பாகப் பின்பற்றப்படும். போராட்டத்தின் போது பணிக்கு வராதவர்களின் விடுப்பு 'அங்கீகரிக்கப்படாத விடுப்பு' எனக் கருதப்படும்.

விடுப்பு மறுப்பு: மருத்துவ விடுப்பு (Medical Leave) தவிர, தற்செயல் விடுப்பு (Casual Leave) உள்ளிட்ட பிற விடுமுறைகள் வழங்கப்படாது.

பணி நீக்கம்: தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள்.

விதிமுறை மீறல்: போராட்டத்தில் ஈடுபடுவது 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973'-ன் (Rules 20, 22, 22-A) படி விதிமீறலாகும்.

வருகை அறிக்கை: அனைத்துத் துறைத் தலைவர்களும் ஊழியர்களின் வருகை குறித்த அறிக்கையை காலை 10:15 மணிக்குள் அரசுக்கு சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.