இன்று அனைத்து CEOs & DEOs கூட்டம் - DSE & DGE இணைச் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 15 فبراير 2026

இன்று அனைத்து CEOs & DEOs கூட்டம் - DSE & DGE இணைச் செயல்முறைகள்!

இன்று அனைத்து CEOs & DEOs கூட்டம் - DSE & DGE இணைச் செயல்முறைகள்!



10, 12-ம் வகுப்பு தேர்வு: சென்னையில் பிப்.16-ல் ஆய்வுக் கூட்டம்

தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 2-ல் தொடங்கி ஏப்​.6-ம் தேதி வரை நடை​பெற உள்​ளன. இதற்​கான ஏற்​பாடு​களை தேர்​வுத் துறை மேற்​கொண்டுள்ளது.

பிளஸ் 2 வகுப்​பு செய்​முறைத் தேர்​வு​கள் இன்று முடிவடைகின்​றன. தொடர்ந்​து, 10-ம் வகுப்​புக்கு 23 முதல் 28-ம் தேதி வரை செய்​முறைத்தேர்​வு​கள் நடக்கின்றன.

இந்தச் சூழலில், பொதுத் தேர்​வுக்​கான ஏற்​பாடு​கள் குறித்த ஆய்​வுக் கூட்​டம் அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலை​மை​யில் சென்​னை​யில் 16-ம் தேதி நடை​பெற உள்​ளது.

துறைச் செயலர் சந்​திரமோகன், இயக்​குநர் கண்​ணப்​பன் உள்​ளிட்ட அதி​காரி​கள், அனைத்து முதன்மை மற்​றும் மாவட்​டக் கல்வி அலு​வலர்கள் பங்​கேற்​கின்​றனர்.

பொதுத் தேர்வு விடைத்​தாள், வினாத்​தாள் கட்​டுக்​காப்பு மையங்​கள் மற்​றும் தேர்வு மையங்​களில் அடிப்​படை வசதி​கள், பாது​காப்​பு, கண்​காணிப்பு அலு​வலர்​கள் நியமனம் உள்​ளிட்ட அம்​சங்​கள் குறித்து இ​தில் ஆலோ​சிக்​கப்பட உள்​ள​து.




DSE & DGE joint processes regarding holding a meeting of all CEOs & DEOs regarding government public examinations! -- அரசுப் பொதுத் தேர்வுகள் தொடர்பாக அனைத்து CEOs & DEOs கூட்டம் நடைபெறுதல் தொடர்பாக DSE & DGE இணைச் செயல்முறைகள்!

மார்ச்/ ஏப்ரல் 2026-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலை பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அவர்களின் தலைமையில் அனைத்து இணை இயக்குநர்கள் / துணை இயக்குநர்கள் / அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்: மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி இடைநிலை தனியார் பள்ளிகள்) மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கான ஆய்வு அலுவலர் கூட்டம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கல்விசார் ஆய்வுக் கூட்டம் ஆகியவை கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

👇👇👇

CLICK HERE TO DOWNLOAD DSE - ALL CEOs DEOs Meeting Proceedings PDF

மேற்கண்ட ஆய்வுக் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அலுவலர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் காணும் கூட்டப்பொருள் குறித்து தயார் நிலையில் வருமாறு அறிவுறுத்தப்படுகிறது. பெறுநர்:

1. அனைத்து இணை இயக்குநர்கள் (சார்ந்த அலுவலகம் வழியாக)

2. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை, தனியார் பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வி).

4. அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள்.

நகல்: 1. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை,

தலைமைச் செயலகம், சென்னை-09- (பணிவுடன் அனுப்பப்படுகிறது).

2. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,

மாநில திட்ட இயக்ககம், சென்னை-6.

3. உறுப்பினர் செயலர், அரசு மாதிரிப் பள்ளிகள், சென்னை-6.

4, தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-6.

5.செயலாளர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை-6.

6. இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை-6.

7. இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், சென்னை-6.

8. இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை-6.

9, இயக்குநர், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், சென்னை-6. ஆய்வு அலுவலர் கூட்டம்-நாள்: 16.02.2026 - நேரம்: 9.00 AM

கூட்டப்பொருள்

1 மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பொதுத்தேர்வுகள் குறித்த

அறிவுரை வழங்குதல்,

பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள்:

(1) விடைத்தாட்கள் பாதுகாப்பு.

(2) வழித்தடம் திட்டமிடுதல்.

(3) வழித்தட அலுவலருக்கான வாகன வசதி / ஆயுதம் ஏந்திய காவலர் ஏற்பாடு செய்தல்.

(4) தேர்வு மையங்களில் உள்ள வசதிகள்.

(5) வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் - பாதுகாப்பு ஏற்பாடுகள்.

(6) மாவட்ட அளவிலான கூட்டம்:

(i) மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டம்.

(ii) கண்காணிப்பு அலுவலர் கூட்டம்.

(7) தேர்வு மைய பாதுகாப்பு ஏற்பாடுகள்.

மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து.

(i) சொல்வதை எழுதுபவர்-புதிய நடைமுறை குறித்த ஏற்பாடுகள்..

(ii) சொல்வதை எழுதுபவர் பணி மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் பயிற்சி.

(iii) திருப்புதல் தேர்வில் - சொல்வதை எழுதுபவர் பணிக்கான ஏற்பாடுகள்.

தேர்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள் - விவாதித்தல்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.