இடிக்கப்பட வேண்டிய கட்டிட விவரங்களை TNSED Administrative செயலியில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 2 يناير 2026

இடிக்கப்பட வேண்டிய கட்டிட விவரங்களை TNSED Administrative செயலியில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

இடிக்கப்பட வேண்டிய கட்டிட விவரங்களை TNSED Administrative செயலியில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! Joint Director of School Education orders to upload details of buildings to be demolished on TNSED Administrative app!

இடிக்கப்பட வேண்டிய கட்டிட விவரங்களை TNSED Administrative செயலியில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (இடைநிலை) செயல்முறைகள். சென்னை-06

ந.களண்.081813/என்2/இ1/2025, நாள் 23.12.2025

பொருள்: பள்ளிக் கல்வி அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப் TNSED பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டிட விவரங்கள் Administrative App-ல் பதிவேற்றம் செய்ய அறிவுரைகள் வழங்குதல் -சார்பு

1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.002405/என்2/ $2/2024. நாள். 10.01.2024.

2. பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம். நாள் 22.12.2025

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் உயர்நிலை மற்றும் சிவ மேல்நிலைப்பள்ளிகளில் நீண்ட காலத்திற்கு முன்பு கட்டப்பட்ட வகுப்பறைகள் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது என்பதை சென்ற கல்வியாண்டில் (2024-2025) கண்டறிந்து 5000க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் மற்றும் சுட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

அதற்கேற்ப கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 1600 கோடி மதிப்பீட்டில் NABARD திட்டத்தின் மூலம் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒருசில அரசு பள்ளிகளில் பயன்படுத்த முடியாத நிலையில் ஒருசில வகுப்பறைகள் (classrooms), கழிப்பறைகள் (toilets) மற்றும் பழுதடைந்த பள்ளி சுற்றுச்சுவர் (compound wall) உள்ளதாக அறியப்படுகிறது. எனவே. இவ்வாறு பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடங்களை மாணவர்களின் நலன் கருதி உடனடியாக அப்புறப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி பழுதடைந்த நிலையிலுள்ள இடிக்கப்பட வேண்டிய பள்ளிக் கட்டிடங்களின் விவரங்களை கீழ்கண்டவாறு TNSEDAdministrative App- பதிவேற்றம் செய்ய அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNSED Administrative App- Google Play Store-Be கொள்ளவும்.

2. பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்களது பயணர் குறியீடு (User ID), கடவுச்சொல் (Password) பயன்படுத்தி உள்நுழையவும்.

3. Civil Inspection என்ற உருவத்தினை (Icon) சொடுக்கவும்.

கள ஆய்வின் அடிப்படையில் கண்டறியப்பட்ட இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களின் விவரங்கள் திரையில் தோன்றும்.

5. இடிக்கப்பட வேண்டிய கட்டிடத்தின் பெயரினை சொடுக்கவும்.

கட்டிடம் இடிக்கப்பட்டதா. இடிக்கப்பட்டு அகற்றப்பட்டதா உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும் உரியனவற்றை தெரிவு செய்து அதற்குரிய புகைப்படத்தினை பதிவேற்றம் செய்திட வேண்டும். கூடுதலாக வேறு ஏதேனும் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டுமெனில் அது குறித்த விவரங்களையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்களது EMIS Logh ID-81 பயன்படுத்தி, தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் தொடர்பான விவரங்களை தரவிறக்கம் செய்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளவும். இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் இடித்து அகற்றப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப் படுகிறது. மேற்கண்ட பதிவுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட TNSED Administrative App-ல் 02.01.2026 முதல் பதிவுகளை மேற்கொண்டு 20.01.2026க்குள் முடிக்குமாறும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.