DEO முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்தல் - தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கோருதல் -தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Preparation of DEO priority list - Requesting details from Headmasters - Proceedings of the Director of School Education regarding this matter.
தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு/பணிமாறுதல் மூலம் நிரப்புதல் 2026-2027-ஆம் ஆண்டிற்கான முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்தல் அரசு உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கோருதல் -தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி விதிகளில் வகுப்பு-IVஇன் கீழ் வரும் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு 2026-27 ஆம் ஆண்டுக்கான உத்தேச காலிப்பணியிட மதிப்பீடு நிர்ணயம் செய்ய கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு அரசளவில் ஆணைகள் எதிர்நோக்கப்படுகிறது. இவ்வகையில் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களுக்கு 2026-27 ஆம் ஆண்டில் பதவி உயர்வு / பணிமாறுதல் மூலம் நியமனம் செய்யத் தகுதியானோர் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார்செய்யும் பொருட்டு. அப்பட்டியலுக்கு அறுதியிட்ட நாளான 01.01.2026 இல் அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் முன்னுரிமைப்பட்டியலிலிருந்து. பரிசீலிக்க தகுதியான அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல்கள் இத்துடன் இணைத்து, அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.
இணைப்பு 1 மற்றும் 2இல் கண்டுள்ள அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி இடம்பெற்றுள்ள தலைமையாசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலில் தலைமையாசிரியர்களுள், தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் சார்பான விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து இதனடியிற் குறிப்பிட்ட தேதிகளில் மாவட்ட வாரியாக சார்ந்த பிரிவு எழுத்தர் /கண்காணிப்பாளர் மூலம் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD DEO Panel 2026-27.- Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.