முடிந்த 'டெட்' தேர்வுக்கும் 5 சதவீத மதிப்பெண் தளர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 31 يناير 2026

முடிந்த 'டெட்' தேர்வுக்கும் 5 சதவீத மதிப்பெண் தளர்வு



முடிந்த 'டெட்' தேர்வுக்கும் 5 சதவீத மதிப்பெண் தளர்வு - A 5 percent mark relaxation has also been given for the completed TET exam.

‘ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி யுள்ளவர்களுக்கும், தேர்ச்சி மதிப்பெண் சதவீத தளர்வு பொருந்தும்' என, ஆசிரியர் தேர்வு வாரி யம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி விகி தமாக, ஏற்கனவே வரையறுக்கப்பட்டு இருந்த தேர்ச்சி சதவீதத்தில் இருந்து, 5 சதவீதம் குறைக் கப்பட்டு, நேற்று முன்தினம் அரசாணை வெளி யிடப்பட்டது.

இது, இட ஒதுக்கீட்டு பிரிவினரான பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பி.சி., பிரிவு முஸ்லிம், எஸ்.சி., - எஸ்.டி., மற் றும் அருந்ததியர் ஆகிய பிரிவினருக்கு பொருந் தும் என, கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், ஆசிரியர் தகுதித் தேர்வுகள் கடந்தாண்டு நவம்பரில் நடத்தப்பட்டு, இன்னும் முடிவுகள் வெளியாகாமல் உள்ளன. நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அரசா ணையை பின்பற்றி, அந்த தேர்வுகளில் பங் கேற்றோருக்கும் மதிப்பெண் குறைக்கப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வில் (TNTET) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் குறைத்து (50% அல்லது 75 மதிப்பெண்கள்) தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த சலுகை நவம்பர் 2025-ல் நடைபெற்ற தேர்விற்கும் பொருந்தும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது, இதனால் பி.சி., MBC, SC/ST பிரிவினர் பயனடைவர்.

முக்கிய விவரங்கள்:

பயனாளிகள்: பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), முஸ்லிம் (BCM), மற்றும் SC/ST, மாற்றுத்திறனாளிகள்.

பழைய விதி: இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 55% மதிப்பெண் (82.5/150).

புதிய விதி (5% தளர்வு): BC, MBC, DNC பிரிவினருக்கு 50% (75/150) மற்றும் SC/ST பிரிவினருக்கு 40% (60/150) என தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவு: பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 60% (90/150) அதே அளவில் தொடரும்.

பொருந்தும் தேர்வு: நவம்பர் 2025-ல் நடந்த தேர்வு உட்பட இனி வரும் தேர்வுகளுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா போன்ற பிற மாநிலங்களின் நடைமுறைகளைப் பின்பற்றி, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.