உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி களில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய வும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக் கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக் கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.. தேசிய தேர்வு கள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு இருமுறை (ஜூன், டிசம்பர்) கணினி வழியில் நடத்தப் படுகிறது.
நடப்பாண்டுக்கான 2-ம்கட்ட யுஜிசி நெட் தேர்வு, டிசம்பர் 31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக் கான ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது សំ /ugcnet.nta.nic.in/என்ற இணையதளத்தில் சென்று பதி விறக்கம் செய்து கொள்ளலாம்.
உதவிப் பேராசிரியர் பணிக்கான டிசம்பர் 2025 யுஜிசி நெட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை தேசிய தேர்வுகள் முகமை (NTA) வெளியிட்டுள்ளது, விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 31 முதல் ஜனவரி 7 வரை நடைபெறும் தேர்வுக்கு ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம்; இந்தத் தேர்வு உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை (JRF) மற்றும் PhD சேர்க்கைக்கு உதவுகிறது.
முக்கிய தகவல்கள்:
தேர்வு: யுஜிசி நெட் டிசம்பர் 2025.
தேதி: டிசம்பர் 31, 2025 முதல் ஜனவரி 7, 2026 வரை.
ஹால்டிக்கெட் வெளியீடு: டிசம்பர் 28, 2025 அன்று வெளியிடப்பட்டது.
இணையதளம்: ugcnet.nta.nic.in.
தேவை: விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி.
எதற்காக இந்தத் தேர்வு?
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெற.
இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை (JRF) பெற.
பிஎச்டி படிப்பில் சேர்க்கை பெற.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
ugcnet.nta.nic.in தளத்திற்குச் செல்லவும்.
விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) உள்ளிடவும்.
ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து, அச்சிட்டுக் கொள்ளவும்.
UGC NET 2025 அட்மிட் கார்டு வெளியீடு; தேர்வர்கள் பதிவிறக்கம் செய்வது எப்படி? நேரடி லிங்க்
டிசம்பர் 31-ம் தேதிக்கான யுஜிசி நெட் அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. https://ugcnet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மொத்தம் 85 பாடங்களுக்கு யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 31 முதல் ஜனவரி 7 வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், முதல் கட்டமாக டிசம்பர் 31-ம் தேதி நடைபெறும் தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. இதர தேர்வுகளுக்கு அடுத்தடுத்து வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுஜிசி நெட் டிசம்பர் 2025 அட்மிட் கார்டு பதிவிறக்கம்?
படி 1 : https://ugcnet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய முடியும்.
படி 2 : முகப்பு பக்கத்தில் Admit Card என Latest News பகுதியில் இடம்பெற்று இருக்கும். அதனை கிளிக் செய்யவும்.
படி 3 : அதில் விண்ணப்ப எண், பாஸ்வோர்டு மற்றும் பாதுகாப்பு எண் ஆகியவற்றை உள்ளிட்டு லாங்கின் செய்யவும்.
படி 4 : தொடர்ந்து, உங்களில் அட்மிட் கார்டு திறையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
படி 5 : மேலும், அட்மிட் கார்டில் இடம்பெற்றுள்ள விவரங்களை சரிபார்த்துக்கொள்ளவும்.
அட்மிட் கார்டில் என்னென்ன இடம்பெறும்?
அட்மிட் கார்டில் தேர்வர்களின் விவரங்களுடன், பதிவு எண், தேர்வின் பாடம், நாள், நேரம் மற்றும் இடம் இடம்பெற்று இருக்கும். அட்மிட் கார்டில் உள்ளப்படி தேர்வர்கள் நேரத்தை முறையான கடைபிடிக்க வேண்டும். தேர்விற்கு செல்லும் நபர்கள், கட்டாயம் அசல் அடையாள அட்டை எடுத்துசெல்ல வேண்டும். ஆதார் இருப்பவர்கள், அசல் ஆதார் அட்டையை கொண்டு செல்லவும். ஆதார் இல்லாதவர்கள் முன்னரே சென்று, அதற்கான உரிய ஆவணத்தை சமர்பிக்க வேண்டும். கூடுதலாக தேர்வர்கள் விண்ணப்பத்தில் அளித்த 2 புகைப்படங்களை எடுத்துசெல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தால் கொண்டு செல்ல வேண்டும்.
الاثنين، 29 ديسمبر 2025
New
உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.