திறன் ( THIRAN ) - மண்டல வாரியாக ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 18 ديسمبر 2025

திறன் ( THIRAN ) - மண்டல வாரியாக ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - PDF



திறன் ( THIRAN ) - மண்டல வாரியாக ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. Skill (THIRAN) - The School Education Department has ordered a region-wise review.

proceedings from the Tamil Nadu School Education Department regarding a regional skill (THIRAN) review meeting.

The meeting, scheduled from December 12 to 22, 2025, will be conducted via Google Meet for district-level administrative committee members.

Dates: December 12, 2025, to December 22, 2025 (9 days including two Saturdays).

Attendees: District-level administrative committee members and District Monitoring Officers.

Platform: Google Meet.

Purpose: To review students' current progress regarding the THIRAN program.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 06, முன்னிலை: முனைவர். ச. கண்ணப்பன்

ந.க.எண்.031347/எப்/இ1/2025 நாள்.10.12.2025

பொருள்

பள்ளிக்கல்வி இயக்ககம் கூட்டம் -மண்டல அளவில் திறன் ஆய்வு 12/12/25 முதல் 22/12/25 முடிய 9 மண்டலமாக பிரித்து மாவட்ட வாரியாக காணொளி மூலமாக ஆய்வு மேற்கொள்ள ஆணை வழங்குதல் - சார்ந்து. திறன் (THIRAN) முன்னேற்றம் சார்பாக குறிப்பிட்ட மாவட்டங்கள் மண்டல வாரியாக முதற்கட்டமாக 12.02.2025 முதல் 22.12.2025 வரை 9 நாட்களுக்கு (13.12.25 மற்றும் 20.12.2025 ஆகிய இரண்டு சனிக்கிழமைகள் உட்பட) மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள நிருவாக குழு உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையில் காணொளி மூலமாக ஆய்வுக்கூட்டம் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணைப்படி நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள நிருவாக குழு உறுப்பினர்கள் அனைவரும் திறன் (THIRAN) சார்ந்த மாணவர்களின் தற்போதைய முன்னேற்ற விவரங்களுடன் காணொளி வாயிலாக (GOOGLE MEET) பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையிலும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் (District Monitoring Officers) பங்கேற்புடனும் நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறத்தப்படுகிறார்கள்.

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD திறன் ( THIRAN ) - மண்டல வாரியாக ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.