புதிய பாரத எழுத்தறிவு திட்டம் NILP தேர்வு தொடர்பான செய்தி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 13 ديسمبر 2025

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் NILP தேர்வு தொடர்பான செய்தி



புதிய பாரத எழுத்தறிவு திட்டம் NILP தேர்வு தொடர்பான செய்தி News regarding the New India Literacy Programme (NILP) examination.

அனைவருக்கும் வணக்கம்

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் NILP தேர்வு தொடர்பான செய்தி

💐 தேர்வு நாள்: 14.12.25 ஞாயிற்றுக்கிழமை

💐 நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 வரை ஏதேனும் 3 மணி நேரம்.

💐 தேர்வு தொடர்பான செய்தி அனைத்து தேர்வு மைய தலைமை ஆசிரியர்களுக்கும் முன்கூட்டியே தகவல் தெரியப்படுத்திட வேண்டும்.

💐 தேர்வு நடைபெறுவதை கற்போர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். 💐 கேள்வித்தாள்களை 13.12.25 அன்று மைய தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைத்திட வேண்டும்.

💐 தேர்வு மையத்தில் இயக்குனர் அவர்களின் வழிகாட்டுதலின்படி போதுமான வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

💐 வயதான கற்போர்கள் மாற்றுத்திறன் கொண்ட கற்போர்கள் அவர்களை வீட்டிலேயே தேர்வு எழுதலாம்.

💐 விடைத்தாள்களை தேர்வு முடிந்த அன்றைய தினமே தலைமை ஆசிரியர்கள் வட்டார வள மையங்களில் ஒப்படைத்திட வேண்டும்.

💐 தேர்வு நடைபெறும் நாளில் வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் குறைந்தது 10 மையங்களையாவது பார்வையிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்கூறிய வழிகாட்டுதலின்படி எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் தேர்வை சிறப்பாக நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.