மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்ட விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! The Director of School Education has issued an order requesting details on the distribution of laptops to students!
மாணவர்களுக்கு 2014-15 முதல் 2020-21ஆம் கல்வியாண்டு வரை மடிக்கணினி வழங்கப்பட்ட விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
(16 வது பேரவை) 17,10.2025 அன்று பேரவையில் வைக்கப்பெற்றது. அறிக்கை கோரியமை தொடர்பாக பார்வை அரசுக்கடிதம் எண் 1237/அறமு. 121,2025 1.நாள் 19:112025
பார்வையில் காணும் அரசுக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் 2014 2015 ஆம் ஆண்டுக்கான அறிக்கை குறித்து பொதுக் கணக்குக்குழுவானது பின்வரும் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. 2014-2015 முதல் 2020-2021 வரையிலான அடுத்தடுத்த ஆண்டுகளின் போது மாணவர்களுக்கு வழங்குவதற்காக வழங்கப்பட்ட நாள் குறித்த அறிக்கை மடிக்கணினிகள்
2014 2015 முதல் 2020 - 2021 வரை, யாதொரு தகுதி வாய்ந்த மாணவரும் இந்தத் திட்டத்திலிருந்து விடுபட்டார்களா என்பதை அறியவும் அவ்வாறு விடுபட்டிருந்தால் அதற்கான காரணங்கள்.
மேற்காணும் அட்டவணையில் கோரப்பட்டுள்ள விவரங்களை அரசுக்கு அனுப்ப வேண்டியுள்ளதால், 2014 2015 முதல் 2020 2021 வரையிலான ஆண்டுகளின் போது மாணவர்களுக்கு வழங்குவதற்காக மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு பெறப்பட்ட நாள் மற்றும் அவை பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நாள் போன்றவற்றை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து முதன்மைக்கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் 17:12:2025 க்குள் (vsection2025@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறும், மேலும் 2014 - 2015 2020 2021 வரை யாதொரு தகுதி வாய்ந்த மாணவரும் இந்தத்திட்டத்திலிருந்து விடுபடவில்லை சான்றளிக்குமாறும் அவ்வாறு விடுபட்டிருந்தால் அதற்கான காரணங்களை தெரிவிக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு படிவம்

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.