கடும் குளிர்: பள்ளிகளுக்கு பிப். வரை விடுமுறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 26 نوفمبر 2025

கடும் குளிர்: பள்ளிகளுக்கு பிப். வரை விடுமுறை



ஜம்மு காஷ்மீரில் கடும் குளிர்: பள்ளிகளுக்கு பிப். வரை விடுமுறை

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் நிலவி வரும் சூழலில் பள்ளிகளுக்கு பிப்ரவரி 28 வரை குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் நிலவி வருகிறது. நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.இந்நிலையில் ஜம்முவின் குளிர் மண்டலம் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் குளிர்கால விடுமுறைக்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி நர்சரி மற்றும் கேஜி வகுப்புகளுக்கு நேற்று முதல் பிப்ரவரி 28 வரையிலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரையிலும் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 11 முதல் பிப்ரவரி 22 வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறைக் காலத்தில் ஆசிரியர்கள் எந்தவொரு கல்விப் பணிக்கும் தயாராக இருக்க வேண்டும், பள்ளியை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய பிப்ரவரி 20, 2026 முதல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.