திறனறி தேர்வு முடிவு வெளியீடு: மாணவர் விபரம் சரிபார்க்க அறிவுரை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 20 نوفمبر 2025

திறனறி தேர்வு முடிவு வெளியீடு: மாணவர் விபரம் சரிபார்க்க அறிவுரை



திறனறி தேர்வு முடிவு வெளியீடு: மாணவர் விபரம் சரிபார்க்க அறிவுரை

தமிழகத்தில் கடந்த அக்., 11ல், தமிழ் இலக்கிய திறனறி தேர்வு நடத்தப்பட்டது. 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பிளஸ் 1 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர் களில், 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டு, இரு ஆண்டுக்கு, மாதந்தோறும், 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இத் தேர்வு முடிவு, நேற்று இணையத்தில் வெளி யிடப்பட்டது.

அதன் முடிவை, பதிவெண், பிறந்த நாளை பதிவிட்டு, மாணவர்கள் பெறலாம். தேர்வு பெற்ற மாணவர்களுக்கு, வங்கி கணக்கு மூலம் உதவித்தொகை வழங்கப்படும். அதனால், 'தேர்வு பெற்ற மாணவர்கள், பெயர், முகப்பெழுத்து, பிறந்த நாள், பள்ளி பெயர் உள்ளிட்ட விபரங்களை மீண்டும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பிழை இருப்பின், அந் தந்த மாவட்டத்தில் உள்ள அரசு தேர்வு உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி, இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவுகள் - திருத்தங்கள் செய்ய வாய்ப்பு - DGE Proceedings - Tamil Language Literacy Test Results - Opportunity to make corrections - DGE Proceedings

11.10.2025 அன்று நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கான இறுதி விடைக்குறிப்பு ( Final Key Answer ) 12.11.2025 அன்றும் மற்றும் தேர்வரது மதிப்பெண் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 18.11.2025 அன்றும் வெளியிடப்பட்டுள்ளது

.
தேர்வர்களின் பெயர் . முகப்பெழுத்து , பிறந்த தேதி மற்றும் பள்ளி நிர்வாக வகை ( Govt / Govt Aided / Private ) ஆகியவற்றில் திருத்தங்கள் இருப்பின் 20.11.2025 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் ( dgedsection@gmail.com ) முகவரிக்கு மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கும் தெரிவிக்கும்படியும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.