TTSE தேர்வுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 11 أكتوبر 2025

TTSE தேர்வுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!



TTSE தேர்வுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!

2025-2026ஆம் கல்வியாண்டிற்கான " தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு நாளை ( 11.10.2025 ) முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மாநிலம் முழுவதிலும் 950 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது . மொத்தம் 2,70,508 மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவ / மாணவியர் இத்தேர்வினை எழுதுகின்றனர். இத்தேர்வில் முதன்மை மதிப்பெண்கள் பெறும் 1500 மாணவ / மாணவியர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளி கல்வி இயக்ககம் மூலமாக மாதந்தோறும் ரூ .1500 / - வீதம் இரண்டு வருடங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் . இத்தேர்வில் 50 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்களும் மிதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.