ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 10 سبتمبر 2025

ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய இயக்குநர் உத்தரவு



ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய இயக்குநர் உத்தரவு

பள்ளிகளில் ஜாதி பாகுபாட்டுடன் செயல் படும் ஆசிரியர்களை, உடனடியாக இடமா றுதல் செய்ய, பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தர விட்டுள்ளார்.

பள்ளி மாணவர்கள் இடையில் ஜாதி மோதல் ஏற்படுவதை தடுத்து, அவர்கள் ஒற்றுமை யாக பழகி, படிக்க வழி செய்ய வேண்டும் என, ஓய்வுபெற்ற நீதிபதி சந் துரு தலைமையிலான, ஒரு நபர் குழு, கடந்த ஜூன் 18ல் அறிக்கை அளித்தது. அதன் அடிப்படை யில், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள் ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் பிறப்பித் துள்ள உத்தரவு:

பள்ளிகளில் ஜாதி மற்றும் வகுப்புவாத எண்ணத்தை, மாணவர் களிடம் உண்டாக்கி, பிரி வினையை ஏற்படுத்தும் ஆசிரியர்கள் குறித்து புகார் வந்தால், அவர் உடனடியாக, வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும். களை மிகவும் பிற்படுத்தப் பட்டோர், ஆதி திராவிடர் நலத்துறை வாயிலாக, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க, விபரங்கள் தேவை என் றால், மாணவர்களை தனியாக, தலைமை ஆசி ரியர் அலுவலகத்துக்கு அழைத்து பேச வேண் டும். இந்த தகவல்களை பொதுவெளியில் பகிரக் கூடாது.

மாணவ, மாணவியர் பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரக் கூடாது. இது குறித்து, அவர்களுக்கு அறிவு றுத்த வேண்டும்.

மாணவர்களுக்கான தொந்தரவுகள், பிரச்னை கள் குறித்து, அவர்கள் வெளிப்படையாக புகார் அளிக்க, பள்ளிகளில் 'மாணவர் மனசு' புகார் பெட்டி வைக்க வேண் டும். அதை, வாரம் ஒரு முறை, தலைமை ஆசி ரியர் முன்னிலையில் திறந்து, ஆலோசனைக் குழு புகார்களை வாயிலாக விசாரித்து, முதன்மைக் கல்வி அலு வலர்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.