பாடப்புத்தகமும் பயிற்சி புத்தகமும் பள்ளிகளுக்கு தேவை ஒரே புத்தகம்
ஆரம்பப்பள்ளி மாண வர்களுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகம் மற்றும் 'எண்ணும் எழுத்தும்' திட் டத்தின் பயிற்சி புத்தகங் களை, ஒரே தொகுப்பாக ஒருங்கிணைத்து, வழங்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உத விபெறும் பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கற் றல் திறனை மேம்படுத் தும் நோக்கில், செயல்வழி அடிப்படையிலான கற்றல் முறைகள் நடைமுறைப்ப டுத்தப்பட்டுள்ளன. திட்டத்தின் கீழ், மாண வர்கள் 'அரும்பு', 'மொட்டு', 'மலர்' என மூன்று நிலைக ளாகப் பிரிக்கப்பட்டு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறி வியல் மற்றும் சமூக அறி வியல் ஆகிய பாடங்களில், பயிற்சி புத்தகங்களின் வாயி லாக, செயல்வழி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தொடக்கத்தில், 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கே, இந்த பயிற்சிகள் அளிக்கப்பட் டன. 2024 கல்வியாண்டு இந்த விரிவாக் முதல், 4ம் மற்றும் 5ம் வகுப்புகளுக்கும் பயிற்சிகள் கப்பட்டன.
இதற்கான துணை புத் தகமாக, 'எண்ணும் எழுத் தும்' பயிற்சி புத்தகம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், அரசு வெளி யிடும் பாடப்புத்தகமும் மாணவர்களுக்கு வழங்கப் படுகிறது. இதனால், ஒரு வகுப்பு மாணவர்களுக்கு, இரண்டு புத்தகங்கள் மூலம் கற்றல் நிகழ்கிறது.
ஆரம்பப்பள்ளி ஆசிரி யர்கள் தெரிவித்ததாவது: எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகத்தின் வாயி லாக, 70 சதவீதம் பாடங் களை கற்றுத்தருகிறோம். இதில், செயல்வழி பயிற் சிகள் அதிகமாக உள்ளன.
பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களும், இதையே அடிப்படையாகக் கொண்டு களில் பாடப்புத்தகத்தை புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அமைந்துள்ளன. வேலைப் பளு காரணமாக, சில நேரங் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, ஒரே ஆசிரி யரே பல வகுப்புகளை கையாள வேண்டிய நிலை உள்ளது. இரண்டு புத்தகங்க ளையும் ஒரே நேரத்தில் கற் றுத்தருவது சவாலாகிறது.
இரண்டு புத்தகங்க ளையும் ஒரே புத்தகமாக இணைத்து வழங்கினால், கற்பித்தல் எளிதாகும்; மாணவர்கள் புரிந்து கொள் ளும் திறனும் அதிகரிக்கும்.
தெரிவித்தனர். இவ்வாறு,
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.