டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 3 أغسطس 2025

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.



டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

Dr. Radhakrishnan Award-Registrstion - Extension upto 06.08.2025

2025 ஆம் ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்காக 386 ஆசிரியர்களை தெரிவு செய்யும் பொருட்டு EMIS இணையதளம் வாயிலாக 20.07.2025 முதல் 03.08.2025 வரை இணையவழி விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பார்வை 3 ல் காணும் கடிதப்படி அவ்விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை EMIS இணையதளத்தில் மிகவும் குறைவான விண்ணப்பங்கள் முழுமையான அளவில் எண்ணிக்கையிலேயே செய்யப்பட்டுள்ளன. எனவே தலைமையாசிரியர்கள் மற்றும் பதிவேற்றம் ஆசிரியர்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க 06.08.2025 வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

மேலும் இவ்விவரத்தினை அனைத்து சார் நிலை அலுவலர்களும் தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கு தெரிவித்து சுற்றறிக்கை அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.