ஆக.22-ல் நடக்கவிருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தள்ளிவைப்பு | டிட்டோ ஜாக் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 18 أغسطس 2025

ஆக.22-ல் நடக்கவிருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தள்ளிவைப்பு | டிட்டோ ஜாக் அறிவிப்பு

அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் ஆக.22-ல் நடக்கவிருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தள்ளிவைப்பு | டிட்டோ ஜாக் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகள் தொடர் பாக பள்ளிக்கல்வி அமைச்சருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத் திய நிலையில், ஆக.22-ம் தேதி நடக்க இருந்த கோட்டை முற் றுகை போராட்டம் தள்ளிவைக் கப்பட்டிருப்பதாக டிட்டோ ஜாக் அமைப்பு அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூ தியதிட்டம், இடைநிலைஆசிரியர் களின் ஊதிய முரண்பாட்டை களைவது, ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் அரசாணை எண் 243-ஐ ரத்துசெய் வது என்பன உள்பட 10 அம்ச கோரக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ( ஜாக்) சார்பில் தொடர்ந்து பல் வேறு வடிவங்களில் போராட்டங் கள் நடைபெற்று வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, 10 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி ஆக.22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கோட்டை நோக்கி முற்றுகையிடும் போராட் டம் நடத்தப்படும் எனடிட்டோ-ஜாக் அமைப்பு அறிவித்திருந்தது. இந் நிலையில், அந்த அமைப்பின் உயர்நிலைக் குழு உறுப்பினர் களுடன் பள்ளிக்கல்வி அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது பள்ளிக்கல்வித் துறை செயலர் டாக்டர் பி.சந் திரமோகன், தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் ஆகியோர் உடனிருந்தனர். டிட்டோ ஜாக் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் வின்சென்ட் பால்ராஜ், இரா.தாஸ், எஸ்.மயில், தியோடர், சேகர் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைச்சருடனான பேச்சு வார்த்தைக்குப் பிறகு டிட்டோ ஜாக்கூட்டமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதுகுறித்து உயர்நிலைக் குழு உறுப்பினர்களில் ஒருவ டிட்டோ-ரான இரா.தாஸ் செய்தியாளர் களிடம் கூறும்போது, “எங்களின் 10 அம்ச கோரிக்கைகளை பரி சீலிப்பது தொடர்பாக அமைச்சர் 2 நாள் அவகாசம் கோரியுள்ளார். இதைத்தொடர்ந்து நாங்களும் ஒரு வாரத்துக்கு பின்னர் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளோம். எனவே, ஆக.22-ம் தேதி நடத்த திட்ட மிட்டிருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தள்ளிவைக்கப்படு கிறது" என்றார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.