தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் G.O : 144 , dt 17.06.2025 - - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 24 يونيو 2025

தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் G.O : 144 , dt 17.06.2025 -



G.O : 144 , dt 17.06.2025 - தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Tamil Nadu School Educational Subordinate Service - Temporary posts of Graduate Teacher ( IEDSS ) in School Education Department - Adhoc Rules - issued .

அரசுப் பள்ளிகளில் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணையின் விவரம்:

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்காக சிறப்பு பி.எட்., பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அந்த பணியிடங்களுக்கென பிரத்யேக விதிகள் எதுவும் இதுவரை வகுக்கப்படாமல் இருந்தது. அதைக் கருத்தில் கொண்டு சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான விதிமுறைகளை வகுக்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகம் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தது.

இது தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் (என்சிஇஆர்டி) சில விதிகளை வகுத்துள்ளது. அதேபோல் இந்திய புனர்வாழ்வு குழுமமும் (ஆர்சிஐ) சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி நிரந்தரப் பணியிடங்களில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான விதிகள் அனைத்தும் தற்காலிக சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பொருந்தும். அதில் சில விதிகள் மட்டும் சூழலுக்கேற்ப மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்தான் (பணியாளர் நலன்) சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன அதிகாரியாக செயல்படுவார். பொதுப் பிரிவில் 53 வயதும், பிற பிரிவுகளில் 58 வயதையும் நிறைவு செய்தவர்களுக்கு இந்தப் பணியில் சேர தகுதி இல்லை. பணியில் சேருபவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

மேலும், அந்த பணியிடங்களுக்கு 12 வகையான கல்வித் தகுதிகளும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே சிறப்பு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது

தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

CLICK HERE TO DOWNLOAD GO ms.no.144, dt 17.06.2025 PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.