பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் CEO, DEO & APO ஆகியோருக்கான மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டம் 23.06.2025 & 24.06.2025 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறுகிறது! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 13 يونيو 2025

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் CEO, DEO & APO ஆகியோருக்கான மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டம் 23.06.2025 & 24.06.2025 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறுகிறது!



பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் CEO, DEO & APO ஆகியோருக்கான மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டம் 23.06.2025 & 24.06.2025 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறுகிறது!

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் ஆய்வுக் கூட்டம் வரும் 23.06.2025 & 24.06.2025 ஆகிய இரண்டு நாட்களும் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகக் கூட்ட அரங்கில் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது . இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் பணியாற்றும் அலுவலர்கள் ( முதன்மைக்கல்வி அலுவலர் , மாவட்டக்கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) . ( தொடக்கக் கல்வி ) , ( தனியார் பள்ளிகள் ) மற்றும் உதவித் திட்ட அலுவலர் ஆகியோர் கலந்துகொள்ள வேண்டும் . ஒவ்வொரு மாவட்டமாக அழைக்கப்பட்டு மாவட்ட நிலவரம் ஆய்வுசெய்யப்பட உள்ளது . இக்கூட்டத்தில் மாவட்ட அலுவலர்கள் கலந்துகொள்ளும்போது அந்தந்த மாவட்டத்திற்குரிய கண்காணிப்பு அலுவலர் மற்றும் அனைத்து இயக்குநர்கள் , இணைஇயக்குநர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்குநரும் , தொடக்கக்கல்வி இயக்குநரும் , தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

👇👇👇👇

District Review Meeting - Download here

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.