12.05.2025 முதல் +2 மதிப்பெண் பட்டியல் விநியோகம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - Scan Copy க்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளும் வெளியீடு!
12.05.2025 முதல் +2 மதிப்பெண் பட்டியல் விநியோகம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - Scan Copy க்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளும் வெளியீடு!
08.05.2025 அன்று மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து 12052025 அன்று காலை 11.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட USER ID , PASSWORD- ஐக் கொண்டு தங்கள் மாணவர்களுக்கு உரிய மதிப்பெண் பட்டியலை ( Statement of Marks ) பதிவிறக்கம் செய்து , அச்சான்றிதழ்களில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து , தலைமையாசிரியரின் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டுத் 12.05.2025 அன்று முதலே மாணவர்களுக்கு வழங்கலாம் அல்லது மாணவர்கள் தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
தனித்தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் , உரிய மதிப்பெண் பட்டியலை ( Statement of Marks ) தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் அறிவுரைகள்👇👇👇
DGE Proceedings - Download here
Thursday, May 8, 2025
New
12.05.2025 முதல் +2 மதிப்பெண் பட்டியல் விநியோகம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - Scan Copy க்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளும் வெளியீடு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.