தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் Scholarship & Student Profile தகவல்களை EMIS தளத்தில் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் - கல்வித்துறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 4, 2025

தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் Scholarship & Student Profile தகவல்களை EMIS தளத்தில் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் - கல்வித்துறை



தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் Scholarship & Student Profile தகவல்களை EMIS தளத்தில் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் - கல்வித்துறை Teachers should check Scholarship & Student Profile information on EMIS platform after conducting exams - Education Department

Pre Matric & Post Matric உதவித்தொகை - மாணவர்கள் விவரங்களை EMIS வலைதளத்தில் சரிபார்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் ஒரு வார காலத்திற்குள் மாணவர்களின் தகவல்களை EMIS வலைதளத்தில் தேவை எனில் உரிய விவரங்களை சரிசெய்து அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் , வகுப்பு 8,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் விவரங்களை " Student Profile " update சரியாக உள்ளதை அந்தந்த வகுப்பாசிரியர் உறுதி செய்து கொள்ளவும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இவ்வலுவலகத்தினால் அனுப்பப்பட்ட ஆணையின் நகலை உடன் அனுப்பிடவும் தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD DSE - Pre Matric & Post Matric Scholarship - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.