18.03.2025 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 17 مارس 2025

18.03.2025 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Local holiday on 18.03.2025 - District Collector's announcement - 18.03.2025 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



பார்வை-1ல் காணும் அரசாணையில், மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் உள்ளூர்த் திருவிழாக்களுக்கு / சிறப்பு நிகழ்வுகளுக்கு அரசால் நாளது வரை அனுமதிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறை நாட்கள் அனைத்தையும் உள்ளடக்கிய திருத்திய உள்ளூர் விடுமுறைப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அரூர் வட்டத்தில் தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமக தேரோட்டத் திருவிழாவையொட்டி, 18.03.2025-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அரூர் வருவாய் கோட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 29.03.2025 (சனிக்கிழமையன்று) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச் சட்டம், 1881 (under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாளன்று, அரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட சார்நிலைக் கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.