கணினி மூலம் நடப்பதற்கு பதிலாக ஓஎம்ஆர் ஷீட் முறையில் குரூப்-2ஏ முதன்மை தேர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 20 ديسمبر 2024

கணினி மூலம் நடப்பதற்கு பதிலாக ஓஎம்ஆர் ஷீட் முறையில் குரூப்-2ஏ முதன்மை தேர்வு



குரூப் 2, 2ஏ தேர்வு OMR ஷீட் முறையிலேயே நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி.

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இதில், குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 தேர்வர்களில் 5,83,467 தேர்வர்கள் முதல்நிலை தேர்வு எழுதினர்.

குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் கடந்த 12 ஆம் தேதி வெளியிடபட்டது. குரூப் 2 பணிகளுக்கு மொத்தம் 534 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், முதன்மைத் தேர்வுக்கு 7,987 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் 2 ஏ பணிகளுக்கு, 2,006 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மொத்தமாக குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுக்கு 21,822 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளன.

இந்நிலையில், குரூப் 2, 2A முதன்மைத் தேர்வு OMR ஷீட் முறையிலேயே நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கணினி (CBT Mode) வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.