School Education - Teachers' Retirement - Fixation of Salary for Re-appointment Period - Clarification - Treasury Letter - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 23 نوفمبر 2024

School Education - Teachers' Retirement - Fixation of Salary for Re-appointment Period - Clarification - Treasury Letter



School Education - Teachers' Retirement - Fixation of Salary for Re-appointment Period - Clarification - Treasury Letter பள்ளிக்கல்வி - ஆசிரியர்கள் ஓய்வு - மறுநியமன காலத்திற்குகான ஊதியம் நிர்ணயித்தல் - தெளிவுரை - Treasury Lette பள்ளிக்கல்வி மறு நியமனம் அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெறும் நாள் மறுநியமன காலத்திற்குகான ஊதியம் நிர்ணயித்தல் - தக்க தெளிவுரை வேண்டி பணிந்தனுப்புதல் - சார்பாக.

பார்வை 4ல் காணும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் விண்ணப்ப கடிதத்தில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில், வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை (Upto the end of Academic Session) மறுநியமனம் வழங்கப்படுகிறது. அப்பணிக்காலத்திற்கான ஊதியம் பங்களிப்பு ஓய்வூதியத்தில் உள்ளோருக்கு பார்வை 2-ல் குறிப்பிட்டுள்ள ஓய்வு பெறுவதற்கு முன்னர் கடைசியாக பெற்ற ஊதியமே மறுநியமன காலத்திற்கான ஊதியமாக வழங்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர். பார்வை 1-ல் குறிப்பிட்டுள்ள அரசாணையின்படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வுபெற்றவர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் (அரசின் பங்களிப்பு 10% + பணியாளர் பங்களிப்பு 10%) பிடித்தம் செய்து மீதமுள்ள தொகையை மறுநியமன கால ஊதியமாக நிர்ணயம் செய்ய ஆணை வெளியிட்டுள்ளது. இவ்வலுவலகத்தில் முள்ளிலைபடுத்தப்பட்ட மறுநியான ஊதியத்திற்கான பட்டியல் அரசாணை 16 (நிதி) நாள்: 28.01.2020-ஐ சுட்டிகாட்டி தணிக்கை மேற்கொண்டு பட்டியல் திருப்பப்பட்டது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நேர்வில் மறுநியமன கால ஊதியம் அனுமறித்தல் தொடர்பாக தக்க நெளிவுரை வழங்கிட வேண்டி இக்கடிதம் பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.