அரசு பள்ளி அடிப்படை பணியாளர் எண்ணிக்கை விவரம் கணக்கெடுப்பு!
அரசு பள்ளிகளில் அடிப்படை பணியாளர் பணியிடங்கள் விவரம் குறித்து கல்வித்துறை கணக்கெடுத்து வருகிறது.
தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அரசு பள்ளிகளுக்கான பாதுகாப்பு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. குறிப்பாக அரசு பள்ளிகளில், அடிப்படை பணியாளர்களான வாட்ச்மேன், துாய்மை பணியாளர், தோட்டக் காவலர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நியமனங்கள் குறித்து கேள்வி எழுந்தது. மல்லிப்பட்டினம் பள்ளியில் வாட்ச்மேன் பணியில் இருந்திருந்தால் வெளிநபர்கள் பள்ளி நேரத்தில் வளாகத்திற்குள் நுழைவது தடுத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என ஆசிரியர்கள் ஆதங்கப்பட்டனர். ஆனால் அரசு பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணியிடங்கள் நியமிக்கப்படவில்லை. ஓய்வு பெற்றவரின் பணியிடங்களையும் கல்வித்துறை வாய்மொழி உத்தரவால் அந்தந்த மாவட்ட சி.இ.ஓ.,க்கள் அரசிடம் சரண்டர் செய்ததாக புகார் எழுந்தது.
இதன் எதிரொலியாக அனைத்து டி.இ.ஓ.,க்கள் எல்லைக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பணியில் உள்ள அடிப்படை பணியாளர்கள் எண்ணிக்கை, காலியாக உள்ள விவரம், எத்தனை ஆண்டுகளாக காலியாக உள்ளது போன்ற விவரம் கணக்கெடுக்கப்படுகிறது. தலைமையாசிரியர்கள் கூறுகையில், அரசு பள்ளிகளின் பாதுகாப்பு கருதி வாட்ச்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும்.
பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டால் அவற்றை மீண்டும் பள்ளிகளுக்கு வழங்கி நியமனம் மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பி.டி.ஏ., எஸ்.எம்.சி., நிதி ஆதாரங்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.