முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் பெயர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 5 نوفمبر 2024

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் பெயர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் பெயர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு

PG Asst பதவி உயர்வு - பட்டியல் தயாராகிறது.!



அரசு மேல்நிலைப் பள் ளிகளில் பணிமாறுதல் வாயிலாக முதுகலை பட் டதாரி ஆசிரியர்கள் நியம னத்திற்கு தகுதி வாய்ந்தோர் பெயர்பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் இவ்வாண்டு ஜன., 1 நில வரப்படி, பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள் ளிக்கல்வி இயக்குனர் உத் தரவிட்டுள்ளார். அதன்படி பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி துணை ஆய்வர்கள் விவரங் களையும் மாவட்டம் வாரி யாக தயார் செய்ய வேண்டும். முதுகலை ஆசிரியராக பணிமாறுதல் மூலம் பதவி உயர்வில் நியமனம் செய்ய, இளங்கலை மற்றும் முதுக லையில் அந்தந்த பாடத் தில் முதன்மைப் பாடமும் மற்றும் பி.எட்., பயின்றி ருக்க வேண்டும். கடந்த 2021ம் ஆண்டு ஜன.1 அல்லது அதற்கு பின் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வை மூன்று ஆண் பசெய் டிற்கு தற்காலிக துறப்பு செய் தவர்கள் மற்றும் ஏற்கனவே முதுகலை ஆசிரியர் பதவி உயர்வினை நிரந்தர துறப்பு செய்தவர்கள் பெயர்கள் எக் காரணம் கொண்டும் இடம் பெறக்கூடாது. இவ்வாறு 16 அம்ச நெறிமுறைகளின் படி பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வரு கிறது. பட்டியலில் பெயர் விடுபட்டதாக ஆசிரியர்க ளிடம் இருந்து ஏதேனும் முறையிடு பெறப்படின் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலு வலரே பொறுப்பு எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்து நவ.20ல் பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.