மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய 3 ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 13 نوفمبر 2024

மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய 3 ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம்



மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய 3 ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பட்டியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோடேப் ஒட்டி 2 மணி நேரம் வகுப்பறையில் உட்கார வைத்து இருந்ததாக போட்டோ சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரின் வாட்ஸ் அப்புக்கு வந்தது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர், புகைப்படத்துடன் கடந்த 11ம்தேதி நடந்த பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜமை சந்தித்து மனு அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி பட்டுக்கோட்டை வட்டார கல்வி அலுவலர் தமிழ்வாணன், சம்பந்தப்பட்ட பள்ளியில் நடத்திய விசாரணையில், வகுப்பு ஆசிரியை சிறிது நேரம் ஒரு மாணவனை பார்த்து கொள்ளும்படி சொல்லிவிட்டு மற்றொரு வகுப்பறைக்கு செல்லும்போது, மாணவர்களே வாயில் டேப் ஒட்டியதாகவும், அதனை மற்றொரு ஆசிரியர் புகைப்படம் எடுத்து மாணவர்களின் பெற்றோருக்கு பரப்பியதாகவும், இதற்கும், தலைமை ஆசிரியைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்தது.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை புனிதா, ஆசிரியைகள் பெல்சி சுமாகுலேட் பெர்சி, முருகேஸ்வரி ஆகிய 3 பேரையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து வட்டார கல்வி அலுவலர் தமிழ்வாணன் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.


மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரம் - ஆசிரியைகள் 3 பேர் பணியிடமாற்றம்

தஞ்சை அய்யம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் வாயில் டேப் ஒட்டிய விவகாரம் - ஆசிரியைகள் 3 பேர் பணியிடமாற்றம்

மாணவா்கள் வாயில் ‘செல்லோ’ டேப் ஒட்டிய விவகாரம் தலைமை ஆசிரியா் உள்பட 3 போ் பணியிட மாற்றம். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியா்கள் உள்பட 3 ஆசிரியா்கள் புதன்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

ஒரத்தநாடு அருகே அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் வகுப்பறையில் இருந்த 5 மாணவா்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 11-ஆம் தேதி மனு அளித்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம், உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டாா்.

அதன்படி ஒரத்தநாடு வட்டாரக் கல்வி அலுவலா் தமிழ்வாணன், பள்ளிக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மாணவா்கள், சக வகுப்பு மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினாா்.

இதில் மாணவா்கள் விளையாட்டாக வாயில் செல்லோ டேப் ஒட்டியதாகவும், அதனைப் பள்ளியில் இருந்த ஆசிரியை ஒருவா் கைப்பேசியில் படம் எடுத்து அதனை பெற்றோா்களுக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை தொடக்கக் கல்வி அலுவலா் மதியழகன், அய்யம்பட்டி அரசுப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை புனிதாவை சின்னக்குமுளை அரசுப் பள்ளிக்கும், ஆசிரியை முருகேஸ்வரியை முள்ளூா்பட்டிக்காடு அரசுப் பள்ளிக்கும், ஆசிரியை பெல்ஸி சில்பா கிறிஸ்டியை ஆலந்தங்குடிகாடு அரசுப் பள்ளிக்கும் புதன்கிழமை பணியிட இடமாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் கூறியது: ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளியில் மாணவா்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டிய விவகாரத்தில், கல்வித்துறை அதிகாரிகள் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அப்பள்ளி தலைமை ஆசிரியா் உள்பட மூன்று ஆசிரியைகளும் வேறு பள்ளிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.