காரைக்குடி - Central Electrochemical Research Institute வளாகத்தில் அனைத்து ஆய்வக ஆராய்ச்சி வசதிகளை பார்வையிட பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு அனுமதி - பள்ளிக் கல்வி இயக்குநர் காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI-Central ElectroChemical Research Institute) தன்னுடைய 'Open day' ஐ வருகிற 26/09/2024 அன்று கடைபிடிக்கிறது. இந்த நாளில் பொதுமக்கள் யாரும் அந்நிறுவன வளாகத்திற்குள் சென்று அனைத்து ஆய்வக ஆராய்ச்சி வசதிகளையும் தடையின்றிப் பார்வையிட்டு வரலாம். எவ்வித முன் அனுமதியும் தேவையில்லை. பேருந்து வசதியையும் அவர்களே செய்து தருகிறார்கள்.
தமிழகக் கல்லூரிகளில் இயற்பியல் மற்றும் வேதியலில் இளங்கலை, முதுகலை படிக்கும் மாணவ-மாணவியர் தங்களுடைய அராய்ச்சி ஆர்வத்தை மேம்படுத்த கட்டாயம் இதுபோன்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளுடனும் பெற்றோர்கள் இந்த நாளில் சென்று ஒவ்வொரு ஆய்வகத்தையும் பார்வையிட்டு வரலாம்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.