டிட்டோஜாக் - கோட்டை முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு - குறித்த அறிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 24 سبتمبر 2024

டிட்டோஜாக் - கோட்டை முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு - குறித்த அறிக்கை!



டிட்டோஜாக் - கோட்டை முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு - குறித்த அறிக்கை!

கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) 83.09.2024 செய்தியறிக்கை தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 30.08.2024 மற்றும் 01.10.2024 ஆகிய இரண்டு நாட்கள் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்திடத் தீர்மானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் டிட்டோஜாக் பேரமைப்புடன் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று (23.08.2024) முற்பகல் சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர், மதிப்புமிகு பன்ளிக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு.தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் பங்கேற்றனர். டிட்டோஜாக் சார்பில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 10 பேரும் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் 31 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாகவும் தனித்தனியாக விரிவாக விவாதிக்கப்பட்டது. அரசாணை: 243 நா: 21.12.2023 ஆல் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாகவும், ஒன்றிய முன்னுரிமையை மாநில முன்னுரிமையாக மாற்றியதால் பதவி உயர்வில் பெண்ணாசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாகவும், அரசாணை 243ல் சார்நிலைப் பணி விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தால் துவக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கோரிக்கை தொடர்பாக தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பெரும்பான்மை ஆசிரியர்களைப் பாதிக்காத வகையில் அரசாணை 243ல் தேவையான மாற்றங்கள் செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உறுதியாரித்துள்ளார். அதேபோன்று இடைநிலை ஆசிரியர்களின் ஊறியப் பிரச்சனை தொடர்பாக மிக விரிவாக விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மூவர்குழு இதுவரை கருத்துக் கேட்காமல் உள்ள பிற ஆசிரியர் அமைப்புகளுடன் விரைந்து கருத்துக் கேட்பு நடத்தி அறிக்கையை விரைந்து தமிழ்நாடு அரசிற்கு அளித்து தீர்வு காண்பதெனவும் உறுதியளிக்கப்பட்டது. மேலும், டிட்டோஜாக் முன்வைத்த 31 அம்சக் கோரிக்கைகளில் நிதி சார்ந்த மற்றும் நிதிசாராத கோரிக்கைகள் என வகைப்படுத்தி, அவற்றில் நிதி சஊராத கோரிக்கைகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதெனவும், 18தி சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசுக்கு உரிய முன்மொழிவுகள் அனுப்பிடவும் உறுதியளிக்கப்பட்டது. நம்முடைய கோரிக்கைகளையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்த விவரத்தை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தையின் இறுதியில் நம்மிடம் தெரிவித்தது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சமக்ரசிக்ஷ அபியான் திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியினை விடுவிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்வதை டிட்டோஜாக் பேரமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியினை உடனடியாக வழங்கிட டிட்டோஜாக் மத்திய அரசினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. தமிழகத்தின் மாணவர் நலன், கல்வி நலன், ஆசிரியர் நலன் காக்கும் மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு டிட்டோஜாக் பேரமைப்பு என்றும் உறுதுணையாக செயல்படுவதெனவும் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு தெரிவித்துக்கொள்கிறது. டிட்டோஜாக் கோரிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரடியாகத் தலையிட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாலும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்துள்ள நிலையில் பெரும்பான்மை ஆசிரியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் 30.09.2024, 01.10.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கோட்டை முற்றுகைப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளது. இப்படிக்கு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.