டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்..
டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம்.
நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055 ஆவணித் திங்கள் 20 ஆம் நாள் (05.09.2024) வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தத்துவமேதை டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனக் கூட்டரங்கில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
+ இவ்விழாவில்
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினை ஆசிரியர்களுக்கு வழங்கி விழாப் பேருரையாற்றவும்
மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்
திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள்
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
சிறப்புரையாற்றவும் அன்புடன் இசைந்துள்ளார்கள்.
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க உள்ளார்கள். தாங்கள் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
முனைவர் ச.கண்ணப்பன்
பள்ளிக் கல்வி இயக்குநர்
நாள்: 05.09.2024, வியாழக்கிழமை | நேரம்: காலை 11 மணி
இடம்: பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், வண்டலூர்,சென்னை-48.
tnschoolsedu
Tuesday, September 3, 2024
New
டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.