40 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் சார்பான விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 28, 2024

40 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் சார்பான விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



40 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் சார்பான விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

வரலாறு, வணிகவியல் பாடங்களை உள்ளடக்கிய மூன்றாவது பாடப்பிரிவு (Third Group) உருவாக்குதல் - 40 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் சார்பான விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! மேல்நிலைப்பள்ளிகளில் 11-12ஆம் வகுப்புகளில் உள்ள மாணவர் அடிப்படையில் வரலாறு,

வணிகவியல்

பாடங்களை உள்ளடக்கிய மூன்றாவது பாடப்பிரிவு (Third Group) உருவாக்கிட அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது 40

முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் சார்பான விவரம் கோருதல் - தொடர்பாக -

1. அரசாணை (நிலை) எண்.196 பள்ளிக்கல்வி (ப.க.5(1)) துறை நாள்.03.11.2023.

2. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.32939/ டபிள்யூ2/இ3/2023 நாள்: 27.05.2024 மற்றும் 03.08.2024.

3. சம்பளம் மற்றும் கணக்கு அலுவலரின் கடித ந.க.எண்.842244/IFHRMS/2024 நாள். 11.09.2024. பார்வையில் காண் அரசாணையில் 20 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு வரலாறு, வணிகவியல் பாடங்களை உள்ளடக்கிய மூன்றாவது பாடப்பிரிவு (3rd Group) (2704– History, Economics, Commerce, Accountancy) துவங்குவதற்கும், மூன்றாவது பாடப்பிரிவு துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள 20 பள்ளிகளுக்கு ஒரு பள்ளிக்கு 2 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 40 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு அனுமதிக்கப்பட்டுள்ள 40 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், ஏற்கனவே ஆசிரியரின்றி உபரியாகக் கண்டறியப்பட்டு பள்ளிக்கல்வி இயக்குநரின் பொதுத்தொகுப்பிற்கு ஈர்த்துக்கொள்ளப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் இருந்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

பார்வை 2ல் காணும் இவ்வியக்ககக் கடிதத்தின்படி, அரசாணை (நிலை) 6T GODT.196 பள்ளிக்கல்வி (ப.க.5(1) துறை நாள்.03.11.2023ன்படி புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள 40 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை IFHRMSல் Post Creation செய்து தர சம்பளக் கணக்கு அலுவலகத்திற்கு கோரப்பட்டது.

எனவே, அரசாணை (நிலை) எண்.196 பள்ளிக்கல்வி (ப.க.5(1)) துறை நாள்.03.11.2023ன்படி புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள 40 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை IFHRMSல் Post Creation செய்து தருவதற்கு கீழ்க்காணும் விவரங்களை வழங்குமாறு சம்பளக் கணக்கு அலுவலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 01. அரசாணையின்படி கூடுதலாக பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரசாணை இணைப்பு -1ல் உள்ள பள்ளிகளின் GTN Report -யினை IFHRMS-ல் பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் ஒப்பம் பெற்று அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

02. அரசாணையின்படி ஏற்கனவே ஆசிரியரின்றி உபரியாகக் கண்டறியப்பட்டு பள்ளிக்கல்வி இயக்குநரின் பொதுத்தொகுப்பிற்கு ஈர்த்துக்கொள்ளப்பட்ட அரசாணை இணைப்பு -2ல் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளின் GTN Report- யினை IFHRMS -ல் பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் ஒப்பம் பெற்று அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

03. அரசாணையில் இணைப்பு 1ல் உள்ள 20 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வரலாறு, வணிகவியல் பாடங்களை உள்ளடக்கிய மூன்றாவது பாடப்பிரிவு (3rd Group) (2704- History, Economics, Commerce, Accountancy) துவங்கப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

மேற்காணும் விவரங்களை 30.09.2024க்குள் அனுப்பி வைக்குமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது மிக மிக அவசரம். இணைப்பு-உரிய விவரங்கள் CLICK HERE TO DOWNLOAD DSE - 40 PG Post Details PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.