தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விரைவில் இரவு காவலாளிகள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 20 أغسطس 2024

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விரைவில் இரவு காவலாளிகள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ்



அரசுப் பள்ளிகளுக்கு விரைவில் இரவு காவலாளிகள்

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு , விரைவில் இரவு காவலாளிகள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

செஞ்சியில் பேட்டியளித்த அவர் ,

தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து 3500-க்கு மேல் 6 வகுப்பறை கட்டிடங்களும் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.1000 கோடி மதிப்பில் 3500 வகுப்பறை கட்டிடங்கள் தேவைப்படும் இடங்களில் கட்டித் தரப்படும். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஹைடெக் லேப் மற்றும் இரவு நேர பள்ளி மாணவர்களை பாதுகாக்க இரவு நேர காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் இரவு காவலர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் நல்லான்பிள்ளைபெற்றால் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில்மகேஷ், அங்கிருந்த ஸ்மார்ட் வகுப்பறைகளை பார்வையிட்டு மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும் என்றும், பள்ளிக் கட்டமைப்புகளை புதுப்பிக்க நடப்பு ஆண்டில் ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.