டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - மதிப்பெண் வழங்குவது புதிய அறிவுரைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 15 أغسطس 2024

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - மதிப்பெண் வழங்குவது புதிய அறிவுரைகள்

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - மதிப்பெண் வழங்குவது புதிய அறிவுரைகள்


டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் விவரங்களை சரிபார்க்க உத்தரவு.

டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் மாநில விருதுக்கு EMIS இணைய தளம் மூலம் விண்ணப்பித்த ஆசிரியர்களின் விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழிகாட்டி கையேட்டினை பயன்படுத்தி 06.08.2024 முதல் 09.08.2024 வரை சரிபார்த்திடவும் , 10.08.2024 முதல் 14.08.2024 வரை மாவட்டத் தேர்வுக் குழு ஒவ்வொரு இனங்களுக்கும் தனித் தனியே 90 மதிப்பெண்கள் வரை வழங்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் 12.08.2024 வரை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் நிலையில் பணி முடிவடையாத நிலையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் நிலையில் 19.08.2024 வரை கால நீட்டிப்பு வழங்கிடவும் , அதன் பின்னர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் , மாவட்டத் தேர்வுக் குழு அமைத்து இறுதி செய்திடவும் , அது குறித்து தனியே கடிதம் உரிய விவரங்களுடன் அனுப்பப்படும் என்ற விவரம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் , தெரிவிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.