Teachers - Mutual Transfer Counselling Schedule - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 30, 2024

Teachers - Mutual Transfer Counselling Schedule



Teachers - Mutual Transfer Counselling Schedule

2024-2025ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை ( EMIS ) இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் -சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் பிறப்பிப்பவர் : முனைவர் ச.கண்ணப்பன்,

ந.க.எண். 26366 / சி3 / இ1 / 2024,

பொருள்:

பார்வை:

நாள் 30.07.2024

பள்ளிக் கல்வி 2024-2025ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் -அறிவுரைகள் வழங்குதல் - சார்பு. 1. அரசாணை (நிலை)எண்.176 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.17.12.2021

2. சென்னை-6 பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.17929/அ1/இ4/2023. நாள்.06.05.2024.

3. சென்னை-6 பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.26366/சி3/இ1/2024. நாள்.10.05.2024 / 22.06.2024.

-0-

பார்வை (1) இல் காணும் அரசாணையின்படி 2024-2025ம் கல்வியாண்டிற்கு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்பாக ஆணை வெளியிடப்பட்டு அதனடிப்படையில் பார்வை (3) இல் காணும் செயல்முறைகளின் வாயிலாக அனைத்துவகை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கோரும் (Mutual Transfer) ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதள வழியாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வகையில் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி மனமொத்த மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படி அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் - அறிவுரைகள் -

1) பார்வை (1) இல் காணும் அரசாணை பத்தி (6) இல் கண்டுள்ளபடி

(a) ஓய்வு பெறுவதற்கு முன் குறைந்தபட்சம் இரு கல்வி ஆண்டுகள் பணிக்காலம் உள்ள ஆசிரியர்களே மனமொத்த மாறுதல் கோர தகுதியானவர்கள். (Example 2024-2025 மற்றும் 2025-2026 கல்வியாண்டுகளில் ஓய்வு பெறுபவர்களாக இருத்தல் கூடாது)

(b) ஏற்கனவே 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டுகளில் மனமொத்த மாறுதல் ஆணை பெற்றவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் பணிபுரிந்து இருத்தல் அவசியம் என்பதால் அவ்வாறனவர்கள் தற்போது மனமொத்த மாறுதல் பெற தகுதியற்றவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

3) ஆண் ஆசிரியர்கள் பெண்கள் மட்டும் பயிலும் (Girls High & Hr.Sec.) பள்ளிகளுக்கு மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பங்களை பரிசிலிக்ககூடாது. இருபாலர் பயிலும் பள்ளிகள் (Co-Ed) மற்றும் ஆண்கள் பயிலும் பள்ளிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவர்.



4) நடப்பு ஆண்டில் 2024-2025 நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்றவர்கள் மனமொத்த மாறுதல் கோரி விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர். EMIS இல் மனமொத்த மாறுதல் பதிவேற்றம் செய்யும் முறை

மனமொத்த மாறுதல் கோரும் ஆசிரியர் தனது Individual Teacher Login Transfer Application Mutual Transfer என்ற மனமொத்த மாறுதலுக்கான படிவத்தில் தங்களது விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்யவேண்டும். மேலும் எந்த ஆசிரியருக்கு மனமொத்த மாறுதல் அளிக்க விரும்புகிறார் என்பதனை அவ்வாசிரியரது EMIS ID (8 Digit ID) யை குறிப்பிட்டு Submit செய்யவேண்டும்.

பின்னர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தனது பள்ளியின் EMIS Login IDயில் உள்சென்று மேற்படி மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியரது விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை சரிபார்த்து Approval செய்யவேண்டும்.

இதன் தொடர்ச்சியாக சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது EMIS Login ID யில் உள்சென்று மனமொத்த மாறுதல் கோரும் ஆசிரியர்கள் இருவரது விவரங்களை ஒப்பிட்டு சரிபார்த்து பின்னர் Approve செய்து மாவட்டத்திற்குள் மனமொத்த மாறுதல் வழங்கும் ஆணைக்கான தனது அலுவலக ந.க. எண்ணினை குறிப்பிட்டு Order ஐ Generate செய்து சார்ந்த அலுவலர் கையொப்பமிட்டு சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நாளன்று வழங்கப்படவேண்டும்.

அனைத்து வகை ஆசிரியர்களுக்கு முதல்நிலை ஒப்புதல் அலுவலர் சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், இரண்டாம் நிலை ஒப்புதல் அலுவலர் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் ஆவார். உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் ஆவார். மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் iv) ஆவார்.

கால அட்டவணை 1 மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் 31.07.2024 முதல் 04.08.2024 வரை

2 மாறுதல் விண்ணப்பங்களின் உள்ள விவரங்களின் அடிப்படையில் அலுவலர் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டிய நாள் 05.08.2024

(Approval from competent authorities) (HM, DEO & CEO) 3 மனமொத்த மாறுதல் உள்மாவட்டம் மற்றும் வெளி மாவட்டம் (ஆணைகளை பதிவிறக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக பெற்றுக்கொள்ள வேண்டிய நாள்) (All Category Teacher / HM) 06.08.2024

பள்ளிக் கல்வி இயக்குநர்

பெறுநர் : அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் மூலமாக) நகல் : இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) சென்னை-6 தகவலுக்காக. நகல்: சென்னை, EMIS ஒருங்கிணைப்பாளர், மாநில திட்ட இயக்ககம் தகவலுக்காக. CLICK HERE TO DOWNLOAD Teachers - Mutual Transfer Counselling Schedule PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.