ஆசிரியர்கள் போராட்டம் | பேச்சுவார்த்தை மூலம் முடிவு எட்டப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 1 أغسطس 2024

ஆசிரியர்கள் போராட்டம் | பேச்சுவார்த்தை மூலம் முடிவு எட்டப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்



ஆசிரியர்கள் போராட்டம் | பேச்சுவார்த்தை மூலம் முடிவு எட்டப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன்நகரில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பூங்காவில் இன்று அழகப்பரின் மார்பளவு திருஉருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிலையைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருக்குறள் படிப்பது மதிப்பெண்கள் எடுக்க மட்டுமல்ல. திருக்குறள் மூலம் தமிழாசிரியர்கள் நீதிக் கதைகளைச் சொல்லி மாணவர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பார். மாணவர்களுக்கு தரமான முறையில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எட்டப்படும்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.